பிரதமர் அலுவலகம்
இட்டாநகரில் வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் பிரதமர் கலந்துரையாடினார்
Posted On:
22 SEP 2025 3:43PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இட்டாநகரில் வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா தொடங்கப்பட்டதற்கு அவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும், அரசின் இதுபோன்ற சீர்திருத்த முயற்சிகள் மீன்வளம், விவசாயம் மற்றும் பிற உள்ளூர் நிறுவனங்கள் போன்ற முக்கிய துறைகளுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை எடுத்துரைத்ததாகவும் திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இட்டாநகரில் வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் இன்று கலந்துரையாடினேன். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா தொடங்கப்பட்டதற்கு அவர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதுபோன்ற முயற்சிகள் மீன்வளம், விவசாயம் மற்றும் பிற உள்ளூர் நிறுவனங்கள் போன்ற முக்கிய துறைகளுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை அவர்கள் எடுத்துரைத்தனர்.
பொருட்களின் தர நிலைகள் பராமரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கான வலுவான மனப்பான்மையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினேன்."
***
SS/SV/KR
(Release ID: 2169587)
(Release ID: 2170110)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam