பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

செப்டம்பர் 20-ம் தேதி பிரதமர் குஜராத் செல்கிறார்

‘கடலிலிருந்து செழிப்பு’ நிகழ்வில் பங்கேற்கிறார்

பாவ்நகரில் சுமார் 34,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்

கடல்சார், திரவ இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நெடுஞ்சாலைகள், சுகாதாரம் மற்றும் நகர்ப்புற போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டங்கள் அமைந்துள்ளன

லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் முன்னேற்றத்தை பிரதமர் ஆய்வு செய்வார் கப்பல் கட்டுமானம், துறைமுக நவீனமயமாக்கல், பசுமை எரிசக்தி மற்றும் கடலோர இணைப்பு மூலம் கடல்சார் துறையால் வழி நடத்தப்படும் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும்

தோலேராவில் பிரதமர் வான்வழி ஆய்வை மேற்கொள்வார்

Posted On: 19 SEP 2025 5:22PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 20-ம் தேதி குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்வார். அவர் காலை 10:30 மணியளவில் பாவ்நகரில் நடைபெறும் ‘கடலிலிருந்து செழிப்பு’ நிகழ்வில் பங்கேற்று சுமார் ரூ.34,200 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்துஅடிக்கல் நாட்டிஉரையாற்றுவார்.

அதன்பிறகுபிரதமர் தோலேராவில் வான்வழி ஆய்வு மேற்கொள்வார். பிற்பகல் 1:30 மணியளவில்அவர் ஒரு ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிலோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தைப் பார்வையிடுவார்.

கடல்சார் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாகபிரதமர் ரூ.7,870 கோடி மதிப்பிலான கடல்சார் துறை தொடர்பான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். மும்பை சர்வதேச கப்பல் முனையத்தை அவர் திறந்து வைப்பார். கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் புதிய கொள்கலன் முனையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்டங்கள்பாரதீப் துறைமுகத்தில் புதிய கொள்கலன் நிறுத்துமிடம்சரக்கு கையாளும் வசதிகள் மற்றும் தொடர்புடைய வளர்ச்சித் திட்டங்கள்டுனா டெக்ரா சரக்கு முனையம்எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் தீயணைப்பு வசதிகள் மற்றும் நவீன சாலை இணைப்புசென்னை துறைமுகத்தில் கடல் சுவர்கள் மற்றும் தடுப்புகள் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு பணிகள்கார் நிக்கோபார் தீவில் கடல் சுவர் கட்டுமானம்காண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தில் பல்துறை சரக்கு நிறுத்துமிடம் மற்றும் பசுமை உயிரி-மெத்தனால் ஆலை‌ மற்றும் பாட்னா மற்றும் வாரணாசியில் கப்பல் பழுதுபார்க்கும் வசதிகள் ஆகிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.

முழுமையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தனது உறுதிப்பாட்டிற்கு இணங்கபிரதமர்குஜராத்தில் பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில்ரூ.26,354 கோடி  மதிப்புள்ள மத்திய மற்றும் மாநில அரசின் பல திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.  திரவ இயற்கை எரிவாயு உள்கட்டமைப்புகூடுதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்கடலோர பாதுகாப்பு பணிகள்நெடுஞ்சாலைகள் மற்றும் சுகாதாரம் மற்றும் நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.

நிலையான தொழில்மயமாக்கல்நவீன உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய முதலீட்டைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட பசுமையான தொழில்துறை நகரமாகக் கருதப்படும் தோலேரா சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தை பிரதமர் வான்வழியாக ஆய்வு செய்வார். இந்தியாவின் பண்டைய கடல்சார் மரபுகளைக் கொண்டாடவும்பாதுகாக்கவும்சுற்றுலாஆராய்ச்சிகல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மையமாகச் செயல்படவும்லோதலில் சுமார் ரூ.4,500 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாக பணிகளின் முன்னேற்றத்தையும் அவர்  ஆய்வு செய்வார்.

 

***

AD/BR/SH


(Release ID: 2168816)