பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        பிரதமர் திரு நரேந்திர மோடி நேபாள இடைக்கால அரசின் பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்
                    
                    
                        நேபாளத்தில் அண்மையில் நடந்த போராட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
அமைதியை மீட்டெடுப்பதற்கும், ஸ்திரத்தன்மைக்கும், நேபாள மக்களின் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் முழு ஆதரவை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்
                    
                
                
                    Posted On:
                18 SEP 2025 1:05PM by PIB Chennai
                
                
                
                
                
                
                பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாள இடைக்கால அரசின் பிரதமர் திருமதி சுஷிலா கார்க்கியுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டதற்கு, பிரதமர் மோடி இந்திய அரசின் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நேபாளத்தில் சமீபத்தில் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட துயரமான உயிரிழப்புகளுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கும், அந்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் முழு ஆதரவை தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த, இந்தியா தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நேபாளத்திற்கு இந்தியாவின் உறுதியான ஆதரவிற்காக பிரதமர் சுஷிலா கார்க்கி,  பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.  மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் விருப்பத்திற்கு பிரதமர் கார்க்கி ஒப்புதல் அளித்தார்.
 
வரவிருக்கும் நேபாளத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.
***
 (Release ID: 2167968)
SS/EA/KR
                
                
                
                
                
                (Release ID: 2168126)
                Visitor Counter : 9
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Nepali 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali-TR 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam