உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காரேகுட்டலு மலைப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா சந்தித்து பாராட்டினார்

Posted On: 03 SEP 2025 10:48AM by PIB Chennai

காரேகுட்டலு மலைப்பகுதியில் ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர், சத்தீஷ்கர் காவல் துறையினர், மாவட்ட வனப்பாதுகாப்புப் படையினர் மற்றும் கோப்ரா வீரர்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா சந்தித்துப் பாராட்டினார். அப்போது சத்தீஷ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணுதேவ் சாய், துணைமுதலமைச்சர் திரு விஜய் சர்மா ஆகியோரும் உடனிருந்தனர்.

அப்போது பேசிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் காரேகுட்டலு மலைப்பகுதியில், நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஆபரேஷன் பிளாக்  ஃபாரஸ்ட் நடவடிக்கையில் துணிச்சலுடன் ஈடுபட்ட வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நக்சலைட்டுகள் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ அல்லது ஒழிக்கப்படும் வரையோ, மோடி அரசு ஓயாது என்று கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நக்சல் இல்லாத இந்தியாவை நாங்கள் உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

வெப்பமிக்க சூழல், உயரமான மலை மற்றும் வெடிமருந்துகளின் அபாயங்களுக்கு இடையே, பாதுகாப்புப் படையினர் மிகத் துணிச்சலுடன் நக்சலைட் பகுதிகளில் நுழைந்து இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்ததாகக் கூறினார். காரேகுட்டலு மலைப்பகுதியில் நக்சலைட்டுகளின் ஆயுதக் குவியல் மற்றும் விநியோக அமைப்பை சத்தீஷ்கர் காவல் துறையினர், மாவட்ட வனப் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர், கோப்ரா வீரர்கள் ஆகியோர் துணிச்சலுடன் அழித்ததாக அவர் குறிப்பிட்டார்.

நக்சலைட்டுகள் நாட்டின் குறைந்த வளர்ச்சியுடைய பகுதிகளில் பெரும் சேதத்தை விளைவித்ததாகவும் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை மூடியதாகவும் அரசுத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதைத் தடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.  நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைக் காரணமாக பசுபதிநாத் முதல் திருப்பதி வரை உள்ள பகுதிகளில் 6.5 கோடி மக்களின் வாழ்க்கையில் புதிய சூரிய வெளிச்சம் உதித்துள்ளதாக அவர் கூறினார்.  நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பலத்த காயம்  அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை எளிதாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டு வருவதாக திரு அமித் ஷா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163233

---

SS/IR/KPG/KR


(Release ID: 2163305) Visitor Counter : 2