பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

25-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 01 SEP 2025 10:14AM by PIB Chennai

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள தமக்கு உற்சாக வரவேற்பு அளித்து சிறப்பாக உபசரித்த சீன அதிபர் திரு ஜி ஜிங்பிங் அவர்களுக்கு  எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இன்று உஸ்பெகிஸ்தான் உதயமான தினம் ஆகும். இதேபோல் நேற்று கிர்கிஸ்தானின் தேசிய தினமாகும். இதனையொட்டி இவ்விரு நாடுகளின் தலைவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேன்மைமிகு தலைவர்களே,

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கிடையே தொடர்புகளை பராமரிப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த அமைப்பில் தற்போது இருக்கும் உறுப்பு நாடுகளுடன்  இந்தியா எப்போதும் ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான பங்களிப்பை அளித்து வருகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கான (எஸ்சிஓ) இந்தியாவின்  தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்ளைகள் 3 முக்கிய அம்சங்களை கொண்டதாகும்.

பாதுகாப்பு, தொடர்புகள், வாய்ப்புகள் ஆகியவையே இந்த மூன்று முக்கிய அம்சங்களாகும்.

முதலாவதாக பாதுகாப்பு என்ற அம்சத்தை எடுத்துகொண்டால் எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு, அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவை அடித்தளமாக இருக்க வேண்டும். எனினும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

பயங்கரவாதம் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன் மட்டுமின்றி மனித குலம் அனைத்திற்கும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக எந்த ஒரு நாடும், சமூகமும் மக்களும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாக கருத முடியாது. இதன் காரணமாகவே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதன் அவசியத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த ஆண்டு கூட்டுத் தகவல் செயல்பாடுகளில் முன்னணியாக அல்-கொய்தா மற்றும் அது தொடர்பான பயங்கரவாத  அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. ஆகவே பயங்கரவாத செயல்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிராக குரல் கொடுப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. எனவே இதுபோன்ற முயற்சிகளுக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு அளிப்பதற்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

மேன்மைமிகு தலைவர்களே,

கடந்த 40 ஆண்டுகளாக கொடூரமான பயங்கரவாத செயல்களால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற தாய்மார்கள் தங்களது மகன்களை இழந்துள்ளார்கள். ஏராளமான குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர்.

அண்மையில் பஹல்காமில் பயங்கரவாத்தின் கோழைத்தனமாக செயல்களை காணமுடிந்தது. இந்த துயரமான தருணத்தில் அனைத்து நட்பு நாடுகளும் இந்தியாவிற்கு அளித்த ஆதரவுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமின்றி ஒவ்வொரு நாட்டிற்கும் வெளிப்படையாக விடுக்கப்பட்ட சவாலாக இருப்பதுடன், மனகுலத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு தனி நபர் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

இத்தகைய சூழ்நிலையில் கேள்வி எழுவது இயற்கையானதே. பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து வரும் ஒரு சில நாடுகளை நம்மால் ஏற்றுகொள்ள முடியுமா? என்பதே ஆகும்.

மேன்மைமிகு தலைவர்களே,

நாம் ஒரு விஷயத்தை தெளிவாகவும், ஒரே குரலாகவும் தெரிவிக்க வேண்டும்: பயங்கரவாதம் குறித்த இரட்டை நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்க்க வேண்டும். இது மனிதகுலத்திற்கு நமது பொறுப்பான கடமையாகும்.

மேன்மைமிகு தலைவர்களே,

எனது எண்ணத்தில் உள்ள இரண்டாவது அம்சம் குறித்து  கூற விரும்புகிறேன். நாடுகளுக்கிடையேயான  தொடர்புகள் மிகுவும் முக்கியமான அம்சமாகும். வர்த்தக வசதிகளை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் வலுவான நட்புறவில் இந்தியா எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆகவே நம்பிக்கை மற்றும் வளர்ச்சியில் இந்தியாவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.

இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் சவகர் துறைமுகம், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற இந்தியாவின் முன் முயற்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துடன் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும் முடியும்.

நாடுகளின் எல்லைகள் மற்றும் இறையாண்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த கொள்கைகள் வாயிலாக போக்குவரத்து இணைப்பிற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும்.

போக்குவரத்து இணைப்புகளை உருவாக்குவதற்காக ஒரு நாட்டின் இறையாண்மையை புறந்தள்ளிச் செல்வது, நம்பிக்கை மற்றும் அர்த்தமுள்ள செயல்களை இழக்க நேரிடும்.

மேன்மைமிகு தலைவர்களே,

மூன்றாவது அம்சமாக வாய்ப்புகள் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சீர்திருத்தங்கள் மற்றும் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள்:

2023-ம் ஆண்டில் இந்தியா தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் புதிய உற்சாகம் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புத்தொழில் நிறுவனங்கள், புதிய கண்டுபிடிப்புகள், பாரம்பரிய மருத்துவம், இளையோருக்கு அதிகாரமளித்தல், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் புத்த பாரம்பரியம் குறித்த பகிர்வுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

அரசுகளை கடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயல்பாடுகள்  இருக்கும் வகையில் இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. மக்கள் தொடர்பு, இளம் அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகும்.

இன்று மக்களிடையே தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றொரு முக்கிய படியாகும் என்பதை  தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கான  மன்றத்தை உருவாக்க வகைசெய்யும். இந்த மன்றம் நமது தொன்மையான நாகரீகங்கள், கலைகள், இலக்கியங்கள் மற்றும் பாரம்பரியத்தை உலக அரங்கில் கொண்டு செல்ல உதவிடும்.

மேன்மைமிகு தலைவர்களே,

இன்று இந்தியா சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற தாரக மந்திரத்துடன் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கொவிட் பெருந்தொற்று காலத்திலிருந்து உலகப் பொருளாதார நிச்சயமற்ற சூழல் வரை ஏற்பட்ட அனைத்து சவால்களையும், வாய்ப்புகளாக நாம் மாற்றியுள்ளோம்.

விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன் நாட்டின் வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றிற்காக புதிய வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறோம்.  இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் அனைத்து நாடுகளும் பங்கேற்க வேண்டும் என்று நான் அன்புடன் அழைப்பு விடுகிறேன்.

மேன்மைமிகு தலைவர்களே,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு சரியான தருணத்தில் நடைபெறுவது தமக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது. அமைப்பு ரீதியிலான குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல், சைபர் பாதுகாப்பு போன்ற சவால்களுக்கு ஒருங்கிணைந்து தீர்வு காணும் வகையில் 4 புதிய மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்த சீர்திருத்த அடிப்படையிலான அணுகுமுறை வரவேற்கத்தக்கதாகும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் சர்வதேச நிறுவனங்களின் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக பரஸ்பரம் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். ஐநா அவையின் 80-வது ஆண்டு விழாவின் போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஐநா அவையின் சீர்திருத்தத்திற்காக குரல் கொடுக்க வேண்டும்.

எதிர்கால தலைமுறையினருக்கு நீதியை மறுக்கும் வகையில் உள்ள பழைய கட்டமைப்புகளை நீக்கிவிட்டு, வளரும் நாடுகளின் விருப்பங்களுக்கு ஏற்ப அவை வடிவமைக்கப்பட வேண்டும். புதிய தலைமுறையின் விருப்பங்களுக்கு தடை ஏற்படுத்தாமல் அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான தருணம் இதுவாகும்.

பன்முகத்தன்மை கொண்ட நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உலக நாடுகளை ஒருங்கிணைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பால் வழிநடத்த முடியும். இன்று இதுகுறித்த முக்கிய அறிக்கை வெளியிடப்படுவதை நான் வரவேற்கிறேன்.

மேன்மைமிகு தலைவர்களே,

அனைத்து உறுப்பு நாடுகளுடன் ஒன்றிணைந்து  நெருங்கிய  ஒத்துழைப்புடன் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப்  பொறுப்பேற்கவுள்ள கிர்கிஸ்தான் அதிபரும், எனது நண்பருமான திரு ஜபாரோவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து  கொள்கிறேன்.

மிக்க நன்றி.

***

(Release ID: 2162560)
AD/SV/AG/KR


(Release ID: 2162601) Visitor Counter : 2