தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கோவாவில் நடைபெறவுள்ள 19-வது வேவ்ஸ் திரைப்படச் சந்தை, இணை தயாரிப்புக்கு 20,000 டாலர் ரொக்க மானியம் அறிவித்துள்ளது
Posted On:
30 AUG 2025 1:46PM by PIB Chennai
தெற்காசியாவின் மிகப்பெரிய திரைப்படச் சந்தையும், இந்தியாவின் சர்வதேச திரைப்பட வெளிப்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருக்கும் வேவ்ஸ் திரைப்படச் சந்தை, 19வது பதிப்பில் இணை தயாரிப்பு சந்தைக்கான அழைப்புகளை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு 2025 நவம்பர் 20–24 வரை கோவாவின் மேரியட் ரிசார்ட்டில் நடைபெற உள்ளது.
வேவ்ஸ் திரைப்படச் சந்தையின் முதன்மை அம்சமான இணைத் தயாரிப்புச் சந்தை, கதையம்சம் கொண்ட மற்றும் ஆவணப்படத் திட்டங்களுக்கான சமர்ப்பிப்புகளை வரவேற்கிறது. 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த தளம் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கலை மற்றும் நிதி ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இந்தச் சந்தை, உலகளாவிய திரைப்பட நிபுணர்களை ஒன்றிணைத்து, சர்வதேசக் கூட்டாண்மைகளையும் கூட்டுத் தயாரிப்புகளையும் வளர்க்கப் பாடுபடுகிறது.
2025 பதிப்பிற்காக, வேவ்ஸ் திரைப்படச் சந்தை, இணைத் தயாரிப்புச் சந்தையிலிருந்து வெற்றி பெற்ற மூன்று திட்டங்களுக்கு மொத்தம் 20,000 அமெரிக்க டாலர் ரொக்க மானியங்களைப் பின்வருமாறு விநியோகிக்கும்:
முதல் பரிசு: கூட்டுத் தயாரிப்பு சந்தை கதையம்சம் - 10,000 அமெரிக்க டாலர்
இரண்டாவது பரிசு: கூட்டுத் தயாரிப்பு சந்தை கதையம்சம் - 5,000 அமெரிக்க டாலர்
சிறப்பு ரொக்க மானியம்: கூட்டுத் தயாரிப்பு சந்தை ஆவணப்படம் - 5,000 அமெரிக்க டாலர்
கதையம்சம் கொண்ட திரைப்டங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 7, 2025 ஆகும், அதே நேரத்தில் ஆவணப்படங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 13, 2025 அன்று முடிவடைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஒத்துழைப்பு மற்றும் இணை தயாரிப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் நிதியாளர்களுடன் ஈடுபட வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162192
***
AD/SMB/RJ
(Release ID: 2162318)
Visitor Counter : 10
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Nepali
,
Hindi
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam