பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியா - ஜப்பான் கூட்டு தொலைநோக்கு: சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வழிநடத்த எட்டு வழிகாட்டுதல்கள்

Posted On: 29 AUG 2025 7:10PM by PIB Chennai

சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் சுதந்திரமான, வெளிப்படையான, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் ஜப்பானும் உள்ளன. நட்பு மற்றும் பரஸ்பர நல்லெண்ணத்தின் நீண்ட பாரம்பரியத்தையும் பொதுவான தொலைநோக்குப் பார்வையையும் கொண்ட இந்தியாவும் ஜப்பானும், அடுத்த பத்தாண்டுகளில் உள் நாட்டிலும் உலகிலும் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை கூட்டாக வழிநடத்தவும்அந்தந்த நாட்டு இலக்குகளை அடைய உதவவும், நமது நாடுகளையும் அடுத்த தலைமுறை மக்களையும் முன்னெப்போதையும் விட நெருக்கமாகக் கொண்டுவரவும் எங்கள் நோக்கத்தை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம்.

இந்த நோக்கத்திற்காக, இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்தியையும்  உலகளாவிய கூட்டாண்மையையும்  கட்டியெழுப்புவதன் மூலம், அடுத்த பத்தாண்டுகளில் இலக்குகளை எட்டுவதற்கான படிகளுடன் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய எட்டு வழிகாட்டுதல்களை நாங்கள் இதன் மூலம் வகுத்துள்ளோம்.

(i) அடுத்த தலைமுறை பொருளாதாரக் கூட்டாண்மை

(II) அடுத்த தலைமுறை பொருளாதாரப் பாதுகாப்பு ஒத்துழைப்பு

(III) அடுத்த தலைமுறை போக்குவரத்து

(IV) அடுத்த தலைமுறை சுற்றுச்சூழல் மரபுகள்

(V) அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பில்  ஒத்துழைப்பு

(VI) அடுத்த தலைமுறை சுகாதாரத்தில் முதலீடு செய்தல்

(VII) அடுத்த தலைமுறை மக்களுடன் மக்கள் ஒத்துழைப்பு

(VIII) அடுத்த தலைமுறை மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு

மேற்கண்ட எட்டு முயற்சிகளின் மூலம், இருதரப்பு உறவுகள் நிறுவப்பட்ட எட்டாவது தசாப்தத்தில் இந்தியா-ஜப்பான் மக்கள் சார்ந்த கூட்டாண்மையின் மாற்றத்தக்க கட்டத்தை ஏற்படுத்தவும், நமது அடுத்த தலைமுறையினருக்கு உறுதியான நன்மைகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகளை வழங்கவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஜப்பான் பிரதமர் திரு இஷிபா ஷிகெரு அழைப்பின் பேரில், 2025 ஆகஸ்ட் 29-30 தேதிகளில் டோக்கியோவில் நடைபெறும் வருடாந்தர உச்சிமாநாட்டிற்காக இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜப்பானுக்கு பயணம் செய்தபோது, வரவிருக்கும் பத்தாண்டுகளுக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் வகையில், இந்த ஆவணத்தை இதன் மூலம் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்கிறோம்.

****

(Release ID: 2161986)

AD/SMB/RJ


(Release ID: 2162265) Visitor Counter : 17