பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்

Posted On: 29 AUG 2025 7:43PM by PIB Chennai

இந்தியா - ஜப்பான் அரசுகளுக்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகள், பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார், உலகளாவிய ஒத்துழைப்பின் அரசியல் பார்வையும் நோக்கங்களும் சிறப்பானவைவிதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தும் சுதந்திரமான, திறந்த, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இரு நாடுகளின் பங்கை இவை எடுத்துக் காட்டுகின்றனசமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

 * வளங்கள், தொழில்நுட்ப திறன்களின் அடிப்படையில் அவர்களின் பலங்களை அங்கீகரிப்பது, * தேசிய பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரித்தல்,

* இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் பொதுவான அக்கறை கொண்ட பாதுகாப்புப் பிரச்சினைகளில் ஒருங்கிணைப்பு,

 * விதிகள் அடிப்படையிலான ஆட்சியின் அடிப்படையில் சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துதல்போன்ற அம்சங்களின் அடிப்படையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த இந்த கூட்டுப் பிரகடனத்தை இருதரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளன.

மேலும் இருதரப்பும் பின்வரும் அம்சங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டன:

 (1)  ஒருவருக்கொருவர் நடத்தும் பலதரப்பு பயிற்சிகளில் பரஸ்பர பங்கேற்பு

 (2) விரிவான உரையாடல்களில் ஈடுபடுதல் 

(3) இந்தோ-பசிபிக் பகுதியில் மனிதாபிமான, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக முப்படை பயிற்சிகள் 

(4) சிறப்பு செயல்பாட்டுப் பிரிவுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு 

(5) ஜப்பான் பாதுகாப்புப் படைகளுக்கும் இந்திய ஆயுதப் படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான இந்தியா-ஜப்பான் ஒப்பந்தத்தின் நடைமுறைகளை மேம்படுத்துதல் 

(6) பயங்கரவாத எதிர்ப்பு, அமைதி காக்கும் நடவடிக்கைகள், இணையதளப் பாதுகாப்பு போன்றவற்றில் முன்னுரிமை அளித்து ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்தல் 

(7) வளர்ந்து வரும் பாதுகாப்பு அபாயங்கள் தொடர்பான மதிப்பீடுகள் உட்பட பலதரப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல் 

(8) பாதுகாப்பு தளவாடங்களை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஒருவருக்கொருவர் தங்களது நிறுவனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் 

(9) ரசாயன, உயிரியல், கதிரியக்கப் பாதுகாப்பில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்தல் 

10) இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியான கடல்சார் சூழலுக்காக கடலோர காவல்படை ஒத்துழைப்பை ஊக்குவித்தல் 

11) ஜப்பான் பாதுகாப்புப் படைகள், இந்திய ஆயுதப் படைகள், இரு நாடுகளின் கடலோர காவல்படையைச் சேர்ந்த கப்பல்களின் துறைமுக ஒத்துழைப்புகள் 

12) கடற்கொள்ளை, ஆயுதமேந்திய கொள்ளை, நாடுகடந்த பிற  குற்றங்களுக்கு எதிரான சட்ட அமலாக்க ஒத்துழைப்பை மேம்படுத்துதல் 

13) பாதுகாப்புத் துறையில் வழக்கமான தொழில்துறை ஒத்துழைப்பு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் 

14) புதிய பிரிவுகளில் தொழில்நுட்பப் பகிர்வு 

15) ராணுவ மருத்துவம், சுகாதாரப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல் 

16) இந்தியாவின் டிஆர்டிஓ ஜப்பானின் ஏடிஎல்ஏ இடையேயான பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் 

17) தேசிய பாதுகாப்பு, செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல், புவிக் கண்காணிப்பு போன்றவற்றில் விண்வெளி அமைப்புகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் 

18) விண்வெளி குப்பைகளைக் கண்காணித்தல், நிர்வகித்தல் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு  

19) பொதுவான பிராந்திய உலகளாவிய பாதுகாப்பு நோக்கங்களை ஊக்குவித்தல் 

20) எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தைக் கண்டித்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொருள் நிதி ஆதரவை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஒன்றிணைந்து செயல்படுதல், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு பலதரப்பு மன்றங்களில் ஒன்றிணைந்து செயல்படுதல். 

****

(Release ID: 2162017)

 AD/PLM/RJ


(Release ID: 2162262) Visitor Counter : 20