பிரதமர் அலுவலகம்
ஜப்பான் மாகாணங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
Posted On:
30 AUG 2025 7:34AM by PIB Chennai
ஜப்பானின் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் பதினாறு ஆளுநர்கள் பங்கேற்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பழங்கால நாகரிகத் தொடர்புகளிலிருந்து உயிர்ப்புடன் உள்ள இந்தியா-ஜப்பான் சமகால உறவுகள் தொடர்ந்து செழித்து வருவதாகப் பிரதமர் தமது உரையில், குறிப்பிட்டார். பல்வேறு துறைகளில் இந்தியா-ஜப்பான் இடையேயான சிறப்பு உத்திசார், உலகளாவிய கூட்டாண்மையின் உத்வேகத்தை எடுத்துரைத்த அவர், டோக்கியோ மற்றும் தில்லியைச் சுற்றியுள்ள உறவுகளுக்கு அப்பால், மாநில-மாகாண ஈடுபாட்டிற்கு புதுப்பிக்கப்பட்ட உந்துதலை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்பதை வலியுறுத்தினார். இந்தச் சூழலில், 15-வது ஆண்டு உச்சிமாநாட்டில் தொடங்கப்பட்ட மாநில-மாகாண கூட்டாண்மை முயற்சியை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், தொழில்நுட்பம், சுற்றுலா, திறன்கள், பாதுகாப்பு மற்றும் கலாச்சார தொடர்புகளுக்கு ஊக்கமளிக்கும். புதிய முயற்சியைப் பயன்படுத்தி உற்பத்தி, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, போக்குவரத்து, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் ஆகிய துறைகளில் கூட்டாண்மைகளை உருவாக்க ஆளுநர்களையும் இந்தியாவின் மாநில அரசுகளையும் அவர் வலியுறுத்தினார்.
ஜப்பானில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் தனித்துவமான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பலங்களைக் கொண்டிருப்பதையும், அதேபோல் இந்திய மாநிலங்களும் அவற்றின் சொந்த, பன்முகத்தன்மை கொண்ட திறன்களைக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் பங்கேற்க ஜப்பான் ஆளுநர்களுக்கு அழைப்பு விடுத்தார். இரு நாடுகளும் செய்துள்ள இளைஞர் மற்றும் திறன் பரிமாற்ற உறுதிமொழிகளுக்கு பங்களிக்கவும், ஜப்பானிய தொழில்நுட்பத்தை இந்திய திறமைகளுடன் உகந்த முறையில் இணைக்கவும் அவர் வலியுறுத்தினார். இந்தியா-ஜப்பான் இடையே வணிகம், கல்வி, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை அடுத்த கட்ட கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு முக்கியமானது என்று ஆளுநர்கள் குறிப்பிட்டனர்.
***
(Release ID: 2162125)
AD/SMB/RJ
(Release ID: 2162215)
Visitor Counter : 21
Read this release in:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada