பிரதமர் அலுவலகம்
ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர்
Posted On:
14 AUG 2025 4:50PM by PIB Chennai
ஜம்மு - காஷ்மீரில் கிஸ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கவலைத் தெரிவித்துள்ளார். இந்த இயற்கை பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நேரத்தில் அனைத்து உதவிகளும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஜம்மு – காஷ்மீரில் கிஸ்த்வார் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் நிலை குறித்த சிந்தனையுடன், அந்த மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
***
(Release ID: 2156417)
SS/SV/KPG/RJ/DL
(Release ID: 2156528)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam