பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரிவினை கொடூர நினைவு தினத்தன்று, பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் துணிச்சலுக்கும், மனஉறுதிக்கும் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

Posted On: 14 AUG 2025 8:52AM by PIB Chennai

இந்திய வரலாற்றில் மிகவும் பயங்கரமான அத்தியாயத்தின் ஒரு நிகழ்வின் போது, எண்ணற்ற தனிநபர்களின் சிறப்புமிக்க எழுச்சியையும், வலியையும் மனதார நினைவு கூர்வதாக, பிரிவினை கொடூர நினைவு தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.

பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் துணிச்சலுக்கும், மனஉறுதிக்கும் பிரதமர் மனப்பூர்வமாக மரியாதை செலுத்தியுள்ளார். கற்பனை செய்ய இயலாத இழப்பை எதிர்கொள்ளும் அவர்களின் திறனையும், தற்போதும் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைப்பதற்கான வலிமையைக் காணும் திறனையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:-

“இந்திய வரலாற்றில் மிகவும் பயங்கரமான அத்தியாயத்தின் ஒரு நிகழ்வின் போது, எண்ணற்ற தனிநபர்களின் சிறப்புமிக்க எழுச்சியையும், வலியையும் நினைவுகூறி இந்தியா பிரிவினை கொடூர நினைவு தினத்தை அனுசரிக்கிறது. அத்துடன் அவர்களுடைய துணிச்சல் மற்றும் கற்பனை செய்ய இயலாத இழப்பை எதிர்கொள்ளும் அவர்களின் திறனையும், தற்போதும் தங்கள் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிப்பதற்கான வலிமையைக் காணும் திறனையும் கௌரவிப்பதற்கான நாளாகும். பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்களுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளனர்.

இந்த நாள் நமது நாட்டை ஒருங்கிணைக்கும் நல்லிணக்கமான பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான நமது நீடித்த பொறுப்பை நினைவுபடுத்துகிறது.

***

(Release ID: 2156241)

SS/IR/AG/RJ


(Release ID: 2156311)