உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் கீழ் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா இன்று தேசியக் கொடி ஏற்றினார்

Posted On: 13 AUG 2025 11:08AM by PIB Chennai

இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் கீழ் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் மத்திய  உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று தேசியக் கொடி ஏற்றினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் தொடங்கப்பட்ட இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கம் இன்று ஒற்றுமை இழையில் மக்களைப் பிணைக்கவும், தேசபக்தி உணர்வை வலுப்படுத்தவும் ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களின் தியாகம், விடா முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் சுதந்திர இந்தியா என்ற கனவை நனவாக்கியதையும் 140 கோடி இந்தியர்கள் அதனை மேம்படுத்தி சிறப்படையச் செய்ய உறுதிபூண்டிருப்பதையும் இந்த இயக்கம் வெளிப்படுத்துகிறது என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

***

(Release ID: 2155921 )

AD/SMB/AG/SG


(Release ID: 2155964)