உள்துறை அமைச்சகம்
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூன்று பேரும் கொல்லப்பட்டனர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Posted On:
29 JUL 2025 5:23PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று மக்களவையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் வலுவான, வெற்றிகரமான மற்றும் தீர்க்கமான பதிலடியான 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சிறப்பு விவாதத்தில் பங்கேற்றார்.
பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மதத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டதை கடுமையாகக் கண்டித்து, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
காஷ்மீரின் டாச்சிகாமில் நேற்று இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையான ஆபரேஷன் மகாதேவ்-ல் சுலேமான், ஹம்சா ஆப்கானி (ஆப்கன்) மற்றும் ஜிப்ரான் ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். இதில் சுலேமான் பஹல்காம் மற்றும் ககாங்கிர் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பாவின் 'ஏ' பிரிவு தளபதி என்றும் அவர் கூறினார். பைசரன் பள்ளத்தாக்கில் நமது அப்பாவி பொதுமக்களைக் கொன்ற ஆப்கனும், ஜிப்ரானும் லஷ்கர் இ தொய்பாவின் 'ஏ' பிரிவு பயங்கரவாதிகள் என்று தெரிவித்தார். அவர்கள் மூன்று பேரும் நேற்று நடந்த தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்டதாக கூறினார். இந்த வெற்றிக்காக 4 துணை ராணுவப்படை சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரை அவை சார்பாகவும், நாட்டு மக்கள் சார்பாகவும் தாம் வாழ்த்துவதாக கூறினார்.
ஆபரேஷன் மகாதேவ் 2025 மே 22 அன்று தொடங்கப்பட்டதாக கூறினார். பஹல்காம் தாக்குதல் 2025 ஏப்ரல் 22 அன்று பிற்பகல் 1 மணிக்கு நிகழ்ந்ததாகவும் கூறிய அவர் தாம் மாலை 5:30 மணிக்கு ஸ்ரீநகரை அடைந்ததாகவும் கூறினார். ஏப்ரல் 23-ம் தேதி ஒரு பாதுகாப்புக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் அனைத்து பாதுகாப்புப் படையினர், ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் ஈடுபட்டதாகவும், இந்தக் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்ல விடக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும், இதற்காக தாங்கள் வலுவான ஏற்பாடுகளைச் செய்ததாகவும், அவர்களை நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல விடவில்லை என்றும் அவர் கூறினார். 2025 மே 22 அன்று, டச்சிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்து உளவுத்துறை மூலம் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார். 4 துணை ராணுவப் படையினர் தலைமையில் அப்போதைய சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் பயங்கரவாதிகளைச் சுற்றி வளைத்ததாகவும், நேற்றைய நடவடிக்கையில் நமது அப்பாவி பொதுமக்களைக் கொன்ற மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த மூன்று பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) ஏற்கனவே கைது செய்துள்ளதாக திரு. அமித் ஷா அவையில் தெரிவித்தார். இந்த மூன்று பயங்கரவாதிகளின் உடல்களை ஸ்ரீநகருக்கு கொண்டு வந்தபோது, நான்கு பேர் அவர்களை அடையாளம் கண்டு, இந்த மூன்று பயங்கரவாதிகள் பஹல்காமில் பயங்கரவாத சம்பவத்தை நடத்தியதாகக் கூறியதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149811
***
AD/IR/SG/DL
(Release ID: 2149902)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam