தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான வேலைவாய்ப்புத் திட்டம் 1 ஆகஸ்ட் 2025 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது
Posted On:
25 JUL 2025 1:04PM by PIB Chennai
மத்திய அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டமானது 1 ஆகஸ்ட் 2025 முதல் ”பிஎம் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான வேலைவாய்ப்புத் திட்டம் (பிஎம்-வி.பி.ஆர்.ஒய்)” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான முன்முயற்சிகளை நோக்கிய திட்டத்தின் ஒட்டுமொத்த குறிக்கோள்கள் மற்றும் நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசாங்கத்தின் பொறுப்புடமை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக வேலைவாய்ப்பை வழங்குபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்பது பல்வேறு தொழில்பிரிவுகளில் அதிலும் குறிப்பாக உற்பத்தித் தொழில் பிரிவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும்.
முதன்முறையாக வேலையில் சேர்பவர்களை கவனத்தில் எடுத்துக் கொள்கின்ற பகுதி-அ மற்றும் வேலை வழங்குபவர்களை கவனத்தில் கொள்கின்ற பகுதி-ஆ என இந்தத் திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
பகுதி-அ: முதன்முறையாக வேலைக்குச் செல்பவர்களுக்கு ஊக்கத்தொகை.
ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் பதிவு செய்துள்ள முதன்முறையாக வேலைக்குச் செல்பவர்களை இலக்காகக் கொண்டுள்ள இந்தப் பகுதி இரண்டு தவணைகளாக அதிகபட்சம் ரூ.15,000 வரை ஒருமாத இ.பி.எஃப் சம்பளத்தை வழங்குகிறது. ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் இதற்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர். வேலைக்குச் சேர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு முதல் தவணையும் 12 மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் தவணையும் வழங்கப்படும்.
பகுதி-ஆ: வேலை வழங்குபவர்களுக்கு ஆதரவு.
ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்ற ஊழியர்களைப் பொறுத்து வேலை வழங்குபவர்கள் ஊக்கத்தொகை பெறுவார்கள். இரண்டாண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வீதம் வேலை வழங்குபவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும். உற்பத்தி தொழில்பிரிவைப் பொறுத்து ஊக்கத்தொகைக்கான காலவரம்பு 3 அல்லது 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் பதிவு செய்துள்ள தொழில் பிரிவுகள் குறைந்தது இரண்டு கூடுதல் ஊழியர்களை (50க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டுள்ள வேலை வழங்குனர்கள்) அல்லது 5 கூடுதல் ஊழியர்களை (50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ள வேலை வழங்குனர்கள்) நீடித்த அடிப்படையில் குறைந்தது 6 மாதங்களுக்கு நியமிக்க வேண்டும்.
கூடுதல் ஊழியருக்கான இ.பி.எஃப் சம்பளப் பிரிவு வேலை வழங்குபவருக்கு கிடைக்கும் லாபம் (ஒரு மாதத்திற்கு ஒரு கூடுதல் ஊழியருக்கு)
ரூ.10,000 வரை ரூ.1,000 வரை
ரூ.10,000க்கு மேல் மற்றும் ரூ.20,000 வரை ரூ.2,000
ரூ.20,000க்கு மேல் (ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் வரை) ரூ.3,000
முதல் முறையாக வேலையில் சேர்பவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை ஆதார் அடிப்படையிலான நேரடி பலன் பரிமாற்ற முறையில் செலுத்தப்படும். வேலை வழங்குபவர்களுக்கான ஊக்கத்தொகை பான்கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
***
(Release ID: 2148270)
AD/TS/SG/KR
(Release ID: 2148395)
Read this release in:
Punjabi
,
Odia
,
Malayalam
,
English
,
Nepali
,
Bengali
,
Gujarati
,
Urdu
,
Telugu
,
Assamese
,
Marathi
,
Hindi
,
Manipuri