பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹீரோஸ் ஏக்கர் நினைவிடத்தில் நமீபியாவின் நிறுவனர் தந்தையும் முதல் அதிபருமான டாக்டர் சாம் நுஜோமாவுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 09 JUL 2025 7:42PM by PIB Chennai

ஹீரோஸ் ஏக்கர் நினைவிடத்தில் நமீபியாவின் நிறுவனர் தந்தையும் முதல் அதிபருமான டாக்டர் சாம் நுஜோமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

 

நமீபியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக டாக்டர் சாம் நுஜோமாவை பிரதமர் நினைவு கூர்ந்தார். சுதந்திர நமீபியாவின் முதல் அதிபராக, நாட்டின் தேச உருவாக்கத்திற்கு டாக்டர் நுஜோமா ஊக்கமளிக்கும் பங்களிப்பை வழங்கினார். அவரது மரபு உலகம் முழுவதும் உள்ள மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

 

டாக்டர் சாம் நுஜோமா, இந்தியாவின் சிறந்த நண்பராக இருந்தார். 1986 ஆம் ஆண்டு புதுதில்லியில் நமீபியாவின் முதல் ராஜதந்திர இயக்கத்தை [அந்தக் காலத்தில் ஸ்வாபோ ] நிறுவியபோது அவரது மதிப்புமிக்க பங்கேற்பு இந்திய மக்களால் எப்போதும் போற்றப்படும் மற்றும் அன்புடன் நினைவுகூரப்படும்.

-----

(Release ID: 2143504)

RB/DL


(रिलीज़ आईडी: 2143557) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam