பிரதமர் அலுவலகம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமருடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
07 JUL 2025 5:13AM by PIB Chennai
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமர் திரு அன்வர் பின் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார்.
2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த மலேசிய பிரதமரின் அரசு முறைப் பயணத்திற்குப் பிறகு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா - மலேசியா இடையே இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்காக அந்நாட்டு பிரதமர் திரு இப்ராஹிமுக்கு, பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர், பலதரப்புவாதம், பிராந்திய பாதுகாப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
ஆசியான் அமைப்பை வெற்றிகரமாக வழிநடத்தியதற்காக பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆசியான் – இந்தியா இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மலேசியா அளித்து வரும் ஆதரவிற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியா - ஆசியான் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மறு ஆய்வுப் பணிகளை விரைவாக இறுதி செய்யும் நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
-----
(Release ID: 2142784)
AD/TS/SV/KPG/KR/DL
(रिलीज़ आईडी: 2142953)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam