பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்
இந்தியாவைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை முறை: பிரதமர்
இந்தியாவும் டிரினிடாட் - டொபாகோவும் பல நூற்றாண்டுகள் பழமையான பிணைப்புகளில் வேரூன்றிய உறவைப் பகிர்ந்து கொள்கின்றன: பிரதமர்
Posted On:
04 JUL 2025 10:51PM by PIB Chennai
டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள் திரு வேட் மார்க், திரு இ. ஜக்தியோ சிங் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.
அவையில் உரையாற்றிய பிரதமர், டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமக்கு மிக உயர்ந்த தேசிய விருதை வழங்கியதற்காக அந்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இந்திய ஜனநாயகத்தின் துடிப்பைப் பற்றி விரிவாகக் கூறிய அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்த நடைமுறையை அதன் கலாச்சாரத்திலும் வாழ்க்கையிலும் ஒருங்கிணைந்ததாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டார்.
டிரினிடாட் டொபாகோவின் வெற்றிகரமான ஜனநாயகப் பயணத்திற்கப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். நவீன நாடுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய பிணைப்புகள் பலம் பெற்று வருகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். இருதரப்பு நாடாளுமன்ற பரிமாற்றங்களை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்ற அவையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க இருப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடங்களை ஒதுக்க எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தார்.
மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பிரதமர் விரிவாகக் கூறினார். அமைதியை விரும்பும் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை உலக சமூகம் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். உலகளாவிய நிர்வாகத்தை சீர்திருத்தவும், உலகளாவிய தெற்கிற்கு அதன் உரிமை வழங்கப்படவும் வேண்டும் என அவர் கூறினார்.
இந்தியர்கள் டிரினிடாட் டொபாகோவிற்கு வந்து சேர்ந்த 180-வது ஆண்டை நினைவு கூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல நூற்றாண்டுகள் பழமையான பிணைப்புகளின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும், இவை தொடர்ந்து ஆழமடைந்து செழிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
****
(Release ID: 2142381)
AD/TS/PLM/SG
(Release ID: 2142516)
Visitor Counter : 2
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam