பிரதமர் அலுவலகம்
கடந்த 11 ஆண்டுகளில் ஒடிசா மாநில ரயில்வே உள்கட்டமைப்பு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது : பிரதமர்
प्रविष्टि तिथि:
27 JUN 2025 1:10PM by PIB Chennai
கடந்த 11 ஆண்டுகளில் ஒடிசா மாநில ரயில்வே உள்கட்டமைப்பு பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதிய ரயில் பயணம், குறிப்பாக புனித நகரமான ஜெகந்நாத் கோவில் அமைந்துள்ள பூரி நகருக்கு செல்லும் யாத்ரீகர்களின் பயணம் எளிமையாக்கப்பட்டுள்ளது என்று அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ள கருத்துக்களை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளததில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கடந்த 11 ஆண்டுகளில் ஒடிசா மாநில ரயில்வே உள்கட்டமைப்பு பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் புனித தலங்களை இணைக்கும் வகையில் பாரதிய ரயில் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் இதன் மூலம் புனித தலங்களுக்கு செல்லும் அவர்களது ரயில் பயணம் எளிமையாக்கப்பட்டுள்ளது என்றும் அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ள கருத்துக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கோள் காட்டியுள்ளார். குறிப்பாக, மகாபிரபுவின் வசிப்பிடமான புனித நகரமான ஜகந்நாத் பூரியில் நடைபெறும் ரத யாத்திரையைக் காண்பதற்கு யாத்ரீகர்களுக்கு இந்த ரயில் பயணம் வசதியாக அமைந்துள்ளது.
----
(Release ID: 2140220)
AD/TS/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2140252)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam