பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் பணிகள் நடைபெற்றுள்ளன: பிரதமர்

நவீனமாக்கப்பட்ட ரயில் நிலையங்களை அமிர்த பாரத நிலையங்கள் என நாடு பெயர் சூட்டியுள்ளது, இன்று 100-க்கும் அதிகமான அமிர்த பாரத நிலையங்கள் தயாராக உள்ளன: பிரதமர்

முப்படைகளுக்கு எங்கள் அரசு சுதந்திரம் வழங்கியது, முப்படைகள் இணைந்து உருவாக்கிய ‘சக்கரவியூகம்’ பாகிஸ்தானை மண்டியிட வைத்தது: பிரதமர்

‘சிந்தூர்’ ‘துப்பாக்கிக் குண்டுகளாக’ மாறும்போது என்ன நடக்கும் என்பதை உலகமும், இந்த நாட்டின் எதிரிகளும் பார்த்தனர்: பிரதமர்

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள மூன்று கோட்பாடுகளை ஆபரேஷன் சிந்தூர் தீர்மானித்தது: பிரதமர்

ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தான் மிகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்தியா இப்போது தெளிவுபடுத்தியிருக்கிறது, இந்த விலை பாகிஸ்தான் ராணுவத்தால், பொருளாதாரத்தால் கொடுக்கப்படும்: பிரதமர்

இந்தியர்களின் வாழ்க்கையோடு விளையாடியதற்காக பாகிஸ்தான் இப்போது மிகுந்த விலை கொடுக்க வேண்டியுள்ளது: பிரதமர்

Posted On: 22 MAY 2025 1:48PM by PIB Chennai

ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பெருமளவில் திரண்டிருந்தோரை வரவேற்றார். 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து இணையதளம் வழியாக குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்றவர்களையும் வரவேற்றார். பல ஆளுநர்கள், முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பையும் அவர் எடுத்துரைத்தார். நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்வில் இணைந்த அனைத்து பிரமுகர்களுக்கும், குடிமக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

கர்னி மாதாவின் வாழ்த்துகளைப் பெற்று இந்த நிகழ்வுக்கு வந்திருப்பதாக குறிப்பிட்ட திரு மோடி, இந்த வாழ்த்துகள் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் நாட்டின் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்தும் என்று உறுதிபட தெரிவித்தார். ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டுவது பற்றி குறிப்பிட்ட அவர், நாட்டின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் இவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். மாற்றத்திற்கான இந்த முன்முயற்சிகளுக்காக குடிமக்களுக்கு தமது வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் மாறி வரும் உள்கட்டமைப்பு பற்றி எடுத்துரைத்த பிரதமர், நவீனமயத்திற்கான நாட்டின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியதோடு, கடந்த 11 ஆண்டுகளில் சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வேக்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றின் துரிதமான முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா தற்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டில் 6 மடங்கிற்கும் அதிகமாக முதலீடு செய்கிறது என்றும், இந்த முன்னேற்றம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். வடக்கே செனாப் பாலம், அருணாச்சலப் பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதை, கிழக்கே அசாமில் போகிபீல் பாலம் என நாடு முழுவதும் சிறப்புமிக்க உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். மேற்கு இந்தியாவை பொறுத்தவரை மும்பையில் அடல் பாலமும், தெற்கில் பாம்பன் பாலமும் இந்தியாவில் இந்த வகையில் முதலாவதாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

ரயில்வே வலைப்பின்னலில் இந்தியாவின் தொடர்ச்சியான நவீனமய முயற்சிகளை எடுத்துரைத்த திரு மோடி, வந்தே பாரத், அமிர்த பாரத், நமோ பாரத் ரயில்களின் அறிமுகம் பற்றி குறிப்பிட்டு இவை நாட்டின் புதிய வேகத்திற்கும், முன்னேற்றத்திற்கும் அடையாளங்கள் என்றார். வந்தே பாரத் ரயில்கள் சுமார் 70 புதிய தடங்களில் இயக்கப்படுகின்றன என்றும், தொலை தூரப் பகுதிகளுக்கும் நவீன ரயில் இணைப்பு கொண்டு வரப்படுகிறது என்றும் அவர் கூறினார். நூற்றுக்கணக்கான சாலை மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உட்பட கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றமடைந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், 34,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். அகல ரயில்பாதை தடங்களில் ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகள் நீக்கப்பட்டிருப்பது பாதுகாப்பை விரிவடைய செய்துள்ளது என்று அவர் கூறினார். சரக்குப் போக்குவரத்தை முறைபடுத்த அர்ப்பணிக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்து வழித்தடங்களின் விரைவான வளர்ச்சியையும் எடுத்துரைத்த திரு மோடி, இந்தியாவின் முதலாவது புல்லட் ரயில் திட்டத்திற்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் பற்றி எடுத்துரைத்தார். இந்த முயற்சிகளுக்கு இடையே 1300-க்கும் அதிகமான ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டிருப்பது பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நவீனமயமாக்கப்பட்ட ரயில் நிலையங்களுக்கு அமிர்த பாரத நிலையங்கள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், இத்தகைய 100 ரயில் நிலையப் பணிகள் முடிவடைந்துள்ளன என்றார். உள்ளூர் கலை மற்றும் வரலாற்றை காட்சிப்படுத்தும் இந்த ரயில் நிலையங்களின் மாற்றத்தை சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் கண்கூடாக கண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். ராஜஸ்தானின் மண்டல்கர் நிலையம், ராஜ்புத் பாரம்பரியங்களின் பெருமையை பிரதிபலிக்கிறது. பீகாரின் தாவே நிலையம் மதுபனி கலைப்படைப்போடு புனிதமான அன்னை தாவேவாலியையும் சித்தரித்துள்ளது என்று குறிப்பிடத்தக்க உதாரணங்களையும் அவர் எடுத்துரைத்தார். மத்தியப்பிரதேசத்தின் ஓர்ச்சா ரயில் நிலையம் பகவான் ராமனின் தெய்வீக சாரத்தை பிழிந்து தருகிறது. ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் வடிவமைப்பு ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் தக்கோர் ரயில் நிலையம் ராஞ்ச்சோத்ராய் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கிறது. திருவண்ணாமலை ரயில் நிலையம் திராவிட கட்டடக் கலை கோட்பாடுகளை பின்பற்றியுள்ளது. பேகம்பேட் நிலையம் கக்காத்தியா வம்சத்தின் கட்டடக் கலை மரபை தழுவியுள்ளது. இந்த அமிர்த பாரத நிலையங்கள் இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த பாரம்பரியத்தை பாதுகாப்பது மட்டுமின்றி மாநிலங்களின் சுற்றுலா வளர்ச்சிக்கு கிரியா ஊக்கியாக செயல்படுவதோடு இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த உள்கட்டமைப்பின் உண்மையான உரிமையாளர்கள் மக்கள் என்பதால் அவர்கள் இந்த ரயில் நிலையங்களின் தூய்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

அடிப்படைக் கட்டமைப்பில் அரசின் முதலீடுகள் வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமின்றி வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வணிக செயல்பாடுகளை அதிகரிக்கின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, தொழிலாளர்கள், கடைக்காரர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், டிரக் வண்டி மற்றும் டெம்போ இயக்குவோர் போன்று போக்குவரத்துத் துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் ஆகியோருக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு நேரடி பயனை அளித்துள்ளது என்றார். அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவடையும் போது இந்தப் பயன்கள் பலமடங்காகும் என்று அவர் கூறினார். விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை குறைந்த செலவில் சந்தைகளுக்கு கொண்டு செல்வதோடு வீணாவதையும் குறைக்க முடியும் என்றார். நன்கு மேம்படுத்தப்பட்ட சாலைகளும், விரிவாக்கம் செய்யப்பட்ட ரயில்வே வலைப்பின்னல்களும் புதிய தொழிற்சாலைகளை ஈர்ப்பதோடு சுற்றுலாவையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க செய்கிறது. அடிப்படைக் கட்டமைப்புக்கு செலவிடுதல் என்பது அதிகரித்து வரும் பொருளாதார வாய்ப்புகளிலிருந்து இளைஞர்கள் பெருமளவு ஆதாயமடைவதால் இது ஒவ்வொரு வீட்டுக்கும் பயனளிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ராஜஸ்தான் மாநிலம் தொடர்ந்து உள்கட்டமைப்பு மேம்பாட்டினால் பெறும் கணிசமான நன்மைகளை திரு. மோடி பட்டியலிட்டார்.  கிராமங்கள் முழுவதும் மற்றும் எல்லைப் பகுதிகளில் கூட உயர்தர சாலைகள் அமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 11 ஆண்டுகளில், ராஜஸ்தானின் சாலை உள்கட்டமைப்பில் மட்டும் சுமார் ரூ 70,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாநிலத்தில் ரயில்வே மேம்பாட்டிற்காக மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ 10,000 கோடி செலவிட உள்ளது என்றும், இது 2014-க்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது 15 மடங்கு அதிகரிப்பாகும் என்றும் அவர் கூறினார். பிகானிரை மும்பையுடன் இணைக்கும் புதிய ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தது குறித்து அவர் குறிப்பிட்டார், இது இணைப்பை மேலும் மேம்படுத்துகிறது. கூடுதலாக, பல பிராந்தியங்களில் பல்வேறு சுகாதாரம், நீர் மற்றும் மின்சாரத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும்,  இந்த முயற்சிகள் ராஜஸ்தானின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதையும், இளைஞர்கள் தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் நகரங்களுக்குள் நம்பிக்கைக்குரிய வாய்ப்புகளைக் கண்டறிவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார் அவர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் ராஜஸ்தானில் துரிதப்படுத்தப்பட்ட தொழில்துறை வளர்ச்சியை சுட்டிக் காட்டிய பிரதமர், முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மாவின் நிர்வாகம் பல்வேறு துறைகளில் புதிய தொழில்துறை கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பிகானிர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும் என்று குறிப்பிட்டார். பிகானேரி பூஜியா மற்றும் பிகானேரி ரஸகுல்லா ஆகியவை தங்கள் உலகளாவிய அங்கீகாரத்தை விரிவுபடுத்தும் என்றும், மாநிலத்தின் உணவு பதப்படுத்தும் துறையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானின் சுத்திகரிப்புத் திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றும், பெட்ரோலியம் சார்ந்த தொழில்களுக்கு மாநிலத்தை ஒரு முக்கிய மையமாக நிலைநிறுத்துகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஸ்ரீ கங்காநகர், ஹனுமன்கர், பிகானிர், ஜோத்பூர், பார்மர் மற்றும் ஜலோர் வழியாகச் செல்லும் அமிர்தசரஸ் முதல் ஜாம்நகர் வரையிலான ஆறு வழிப் பொருளாதார வழித்தடத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். கூடுதலாக, ராஜஸ்தானில் தில்லி-மும்பை விரைவுச் சாலை நிறைவடையும் தருவாயில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த இணைப்புத் திட்டங்கள் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் கூறினார்.

ராஜஸ்தானில் பிரதமரின் சூரியக்கூரை மின்சாரத் திட்டத்தின் விரைவான முன்னேற்றத்தை திரு மோடி சுட்டிக்காட்டினார்.  மாநிலத்தில் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த முயற்சியால் ஏற்கனவே பயனடைந்துள்ளனர், இது அவர்களின் மின்சாரக் கட்டணங்களை நீக்கி, சூரிய சக்தி மூலம் வருமானத்தை ஈட்ட வாய்ப்பளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த முன்னேற்றங்கள் ராஜஸ்தானின் மின்சார விநியோகத்தை மேலும் மேம்படுத்தும் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். மாநிலத்தில் அதிகரித்து வரும் மின் உற்பத்தி தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அவர் தெரிவித்தார்.

ராஜஸ்தான் நிலத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய திரு மோடி, பாலைவன நிலப்பரப்பை வளமான நிலப்பரப்புகளாக மாற்றுவதில் மகாராஜா கங்கா சிங்கின் தொலைநோக்குப் பார்வை முயற்சிகளை நினைவு கூர்ந்தார். இந்தப் பகுதிக்கு நீரின் முக்கியத்துவத்தையும், பிகானிர், ஸ்ரீ கங்காநகர், ஹனுமன்கர் மற்றும் மேற்கு ராஜஸ்தான் போன்ற பகுதிகளின் வளர்ச்சியை முன்னேற்றுவதில் அதன் பங்கையும் அவர் விளக்கினார். நதி இணைப்பு முயற்சிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதோடு, நீர்ப்பாசனத் திட்டங்களை முடிப்பதிலும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். ராஜஸ்தான் முழுவதும் பல மாவட்டங்களுக்கு பயனளிக்கும், விவசாயிகளுக்கு சிறந்த விவசாய வாய்ப்புகளை உறுதி செய்வதுடன், பிராந்தியத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் பார்வதி-காளிசிந்த்-சம்பல் இணைப்புத் திட்டத்தின் தாக்கத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

ராஜஸ்தானின் அசைக்க முடியாத மனப்பான்மையை வலியுறுத்தி, நாட்டையும் அதன் மக்களையும் விட பெரியது எதுவுமில்லை என்று கூறிய பிரதமர், ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்தார். அங்கு தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அப்பாவி உயிர்களைக் குறிவைத்தனர். பஹல்காமில் குண்டுகள் சுடப்பட்டாலும், அவை 140 கோடி இந்தியர்களின் இதயங்களைக் காயப்படுத்தி, பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியுடன் நாட்டை ஒன்றிணைத்ததாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஆயுதப் படைகளின் தீர்க்கமான பதிலை அவர் எடுத்துரைத்தார், அவர்களுக்கு முழு செயல்பாட்டு சுதந்திரம் வழங்கப்பட்டதாகக் கூறினார். கவனமாக செயல்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில், முப்படைகளும் இணைந்து, அவர்களை அடிபணியச் செய்ததாக அவர் குறிப்பிட்டார். ஏப்ரல் 22 தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா 22 நிமிடங்களுக்குள் பதிலடி கொடுத்து, ஒன்பது முக்கிய பயங்கரவாத மறைவிடங்களை அழித்ததாக அவர் வெளிப்படுத்தினார். "இந்த நடவடிக்கை நாட்டின் வலிமையை நிரூபித்தது, புனித சிந்தூர் துப்பாக்கிச் சூடாக மாறும்போது, விளைவு உறுதியானது என்பதை நிரூபித்தது" என்று பிரதமர் தெவித்தார்.  ஒரு குறிப்பிடத்தக்க தற்செயல் நிகழ்வையும் அவர் சுட்டிக்காட்டினார் - ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, அவரது முதல் பொதுக்கூட்டம் ராஜஸ்தானில் நடந்தது. இதேபோல், சமீபத்திய ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் உள்ள பிகானரில் மீண்டும் தனது முதல் கூட்டத்தை நடத்துவதாகத் தெரிவித்த பிரதமர்,  இது இந்த பூமியின்  ஆழமாக வேரூன்றிய வீரத்தையும் தேசபக்தியையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றார்.

புனித சிந்துாரத்தை அழிக்க முயன்றவர்கள் தூசியாகிவிட்டதாகவும், இந்தியாவின் இரத்தத்தை சிந்த வைத்தவர்கள் இப்போது முழு விலையையும் செலுத்திவிட்டதாகவும் ராஜஸ்தானில் இருந்து அவர் அறிவித்தார். இந்தியா அமைதியாக இருக்கும் என்று நினைத்தவர்கள் இப்போது தலைமறைவாக இருப்பதாகவும், தங்கள் ஆயுதங்களைப் பற்றி பெருமையாகப் பேசியவர்கள் இப்போது இடிபாடுகளுக்குள் புதைந்து கிடப்பதாகவும் பிரதமர் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் பழிவாங்கும் செயல் அல்ல, மாறாக நீதியின் ஒரு புதிய வடிவம் என்பதை வலியுறுத்திய அவர், இது வெறும் கோபத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, இந்தியாவின் அசைக்க முடியாத வலிமை மற்றும் உறுதியின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டார். தேசம் ஒரு துணிச்சலான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, எதிரியை நேரடியாகவும் தீர்க்கமாகவும் தாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.  "பயங்கரவாதத்தை நசுக்குவது என்பது வெறும் ஒரு உத்தி மட்டுமல்ல, ஒரு கொள்கை, இதுதான் இந்தியா, இதுதான் புதிய இந்தியா" என்று திரு  மோடி உறுதிபடத் தெரிவித்தார். .

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிறுவப்பட்ட மூன்று முக்கிய கொள்கைகளை கோடிட்டுக் காட்டிய பிரதமர், முதல் கொள்கையை குறிப்பிட்டார் - இந்தியாவின் மீதான எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் ஒரு தீர்க்கமான பதிலடியுடன் எதிர்கொள்ளப்படும், நேரம், முறை மற்றும் விதிமுறைகளை இந்தியாவின் ஆயுதப் படைகள் மட்டுமே தீர்மானிக்கும். இரண்டாவதாக, அணு ஆயுத அச்சுறுத்தல்களால் இந்தியா மிரட்டப்படாது என்று அவர் வலியுறுத்தினார். மூன்றாவதாக, பயங்கரவாத மூளைகளுக்கும் அவர்களை ஆதரிக்கும் அரசுகளுக்கும் இடையில் இந்தியா இனி வேறுபடுத்திப் பார்க்காது என்றும், பாகிஸ்தானின் அரசு மற்றும் அரசு சாரா ஆதரவாளர்கள்  என்ற வேறுபாட்டை நிராகரிப்பதாகவும் அவர் கூறினார். பயங்கரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தானின் பங்கை அம்பலப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளை எடுத்துரைத்து, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்களைக் கொண்ட ஏழு தனித்துவமான குழுக்கள், பாகிஸ்தானின் உண்மையான முகத்தை உலகிற்கு முன்வைக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கடந்த காலங்களில் நடந்த மோதல்களில் பாகிஸ்தான் தொடர் தோல்வி அடைந்துள்ளதை நினைவு கூர்ந்து, இந்தியாவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு பாகிஸ்தான் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று திரு. நரேந்திர மோடி கூறினார். வெளிப்படையான போர்களில் வெற்றிபெற முடியாமல், பாகிஸ்தான் நீண்ட காலமாக பயங்கரவாத செயல்களை இந்தியாவுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது என்றும், வன்முறை நடவடிக்கைகள் வாயிலாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி  வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் இந்தியாவின் உறுதிப்பாட்டை குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும், தனது தலைமையின் கீழ், நாடு வலிமையானதாகவும், அசைக்க முடியாததாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்தியா மீதான எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், பாகிஸ்தான் இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் விலையை கொடுக்க நேரிடும்" என்றும் திரு நரேந்திர மோடி எச்சரித்தார்.

பிகானிர் நகரை சென்றடைந்ததும், பாகிஸ்தான் குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்ற நல் விமான நிலையத்தில் தாம் தரையிறங்கியதாகவும், ஆனால் பாகிஸ்தானால் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்த இயலவில்லை என்றும் பிரதமர் கூறினார். இந்திய இராணுவம் எல்லையைக் கடந்து சென்று நடத்திய துல்லியத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பு காரணமாக, அந்நாட்டின் ரஹீம் யார் கான் விமானப்படைத் தளம் பல நாட்களுக்கு மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். பாகிஸ்தான் நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளையோ அல்லது பேச்சுவார்த்தையோ நடத்தப்பட மாட்டாது என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். இனி அந்நாட்டுடன் நடைபெறும் எந்தவொரு பேச்சு வார்த்தையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  காஷ்மீர் குறித்ததாக மட்டுமே இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்தால், அந்நாடு மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும் என்று அவர் எச்சரித்தார். பாகிஸ்தான் தனக்கு உரிய தண்ணீரைப் பெற இந்தியா அனுமதிக்காது என்றும், இந்தியர்களின் இரத்தத்துடன் விளையாடுவதன் வாயிலாக அது பெரும் விலையை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் மீண்டும் எச்சரித்தார். "இந்தியாவின் இந்த  உறுதியான நிலைப்பாடு, உலகில் வேறு எந்த சக்தியாலும் அசைக்க முடியாதது" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

"வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு பாதுகாப்பு மற்றும் வளம் ஆகிய இரண்டும் மிகவும் அவசியம்" என்று திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வலுப்படுத்தப்பட்டால் மட்டுமே அதனை உணர முடியும் என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சி, நாட்டின் சமநிலை மற்றும் துரிதப்படுத்தப்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒரு சிறந்த  முன்னுதாரணமாக இருப்பதை நிரூபிக்கும் வகையில் நடைபெறுவதாக  அவர் கூறினார். இத்துடன் தனது உரையை முடித்துக் கொண்ட அவர், வீரத்தின் பூமியிலிருந்து அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கூறினார்.

ராஜஸ்தான் மாநில ஆளுநர் திரு. ஹரிபாவ் கிசன்ராவ் பகடே, அம்மாநில முதலமைச்சர் திரு. பஜன்லால் சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு. அஸ்வினி வைஷ்ணவ், திரு. அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னணி

தனது உறுதியான நிலைப்பாட்டிற்கு ஏற்ப, நாட்டில் ரயில் உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து நவீனப்படுத்தி, மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் ரூ.1,100 கோடிக்கும் கூடுதலான செலவில் உருவாக்கப்பட்ட மறுசீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட 103 அம்ரித் ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைத்தார். அம்ரித் பாரத் ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பிராந்திய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில், பயணியர் வசதிகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கர்ணி மாதா கோயிலுக்கு வருகை தரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை அளிக்கும் நோக்கில் தேஷ்னோக் ரயில் நிலையம், கோயில் கட்டிடக்கலை, வளைவு, நெடுவரிசை போன்ற பல்வேறு கருப்பொருளால் ஈர்க்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பேகம்பேட் ரயில் நிலையம் ககத்தியா பேரரசின் கட்டிடக்கலையால் ஈர்க்கும் வகையில் புனரமைக்கப்பட்டுள்ள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள தாவே நிலையம் 52 சக்தி பீடங்களில் ஒன்றான மா தவேவாலியைக் குறிக்கும் வகையில் பல்வேறு சுவரோவியங்கள் மற்றும் கலைப் படைப்புகளை உள்ளடக்கியதாகவும், மதுபனி ஓவியங்களை சித்தரிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில்  உள்ள டகோர் ரயில் நிலையம் ராஞ்சோத்ராய் ஜி மகாராஜாவின் நினைவைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மறுசீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ள அம்ரித் ரயில் நிலையங்கள் கலாச்சார பாரம்பரியம், ரயில் பயணிகளை மையமாகக் கொண்ட மாற்றுத்திறனாளிப் பயணிகளுக்கான வசதிகள் உட்பட, பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் நிலையான நடைமுறைகளுடன் கூடிய நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைக்கின்றன.

இந்திய ரயில்வே தனது போக்குவரத்திற்கான கட்டமைப்புக்களை 100%  மின்மயமாக்குவதை நோக்கி முன்னேறி வருகிறது. இது ரயில்வே துறையின் செயல்பாடுகளை மிகவும் திறமையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றும். இதன்படி, பிரதமர் சுரு -சாதுல்பூர் இடையே (58 கி.மீ) ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சூரத்கர்-பலோடி (336 கி.மீ); புலேரா-தேகானா (109 கி.மீ); உதய்பூர்-ஹிம்மத்நகர் (210 கி.மீ); பலோடி-ஜெய்சால்மர் (157 கி.மீ) மற்றும் சம்தாரி-பார்மர் (129 கி.மீ) ஆகிய ரயில் பாதைகளையும்  மின்மயமாக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், 3 வாகன சுரங்கப்பாதைகள் அமைத்தல், தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி, வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைவடைந்துள்ள 7 சாலைத் திட்டங்களையும் அவர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கவுள்ளார். ரூ.4850 கோடிக்கும் கூடுதல் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலைத் திட்டங்கள், சரக்குகள், மற்றும் மக்களின் சீரான போக்குவரத்தை எளிதாக்கும். இந்தோ-பாகிஸ்தான் எல்லை வரை நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது பாதுகாப்புப் படையினருக்கு எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பு சார்ந்துள்ள உள்கட்டமைப்பு வசதிகளையும் வலுப்படுத்துவதாக உள்ளன.

அனைவருக்கும் மின்சாரம், பசுமை மற்றும் தூய்மையான எரிசக்தி என்ற தொலைநோக்குப் பார்வையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், பிரதமர், தித்வானா குச்சாமானில் உள்ள பிகானிர் மற்றும் நவாவில் சூரிய மின் திட்டங்கள், மின்சார விநியோகத்திற்கான மின் பரிமாற்ற அமைப்புகள் பகுதி பி - பவர் கிரிட் சிரோஹி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் பகுதி இ - பவர் கிரிட் மேவார் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனம் உள்ளிட்ட மின் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பிகானிரில் சூரிய மின் உற்பத்தித் திட்டம், நீமுச் பவர் கிரிட் மற்றும் பிகானிர் வளாகத்தில் இருந்து மின்சார விநியோகம் செய்வதற்கான மின்  பரிமாற்ற அமைப்பு, சுத்தமான எரிசக்தியை வழங்கும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் ஃபதேஹ்கர்-II மின் நிலைய வளாகத்தில்  உருமாற்றத் திறனை அதிகரித்தல் உள்ளிட்ட மின் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்துக்கான இணைப்பு, மின்சாரம், சுகாதார சேவைகள் மற்றும் குடிநீர் கிடைப்பதை மேம்படுத்துவதற்காக 25 முக்கியமான மாநில அரசு மேற்கொண்டு வரும் புதிய திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியும், பல்வேறு சேவைகளைத் தொடங்கி வைத்தும், நிறைவேறியுள்ள திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தும் வைத்தார். மொத்தம் 750 கி.மீ. நீளமுள்ள 3,240 கோடி ரூபாய் மதிப்பிலான 12 மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல், பல்வேறு  திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து அர்ப்பணித்தல் ஆகியவை இதில் அடங்கும்; இந்தத் திட்டத்தின் கீழ், விரிவாக்கப் பணிகளுக்கு கூடுதலாக 900 கி.மீ. புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும். பிகானிர் மற்றும் உதய்பூர் ஆகிய நகரங்களில் புதிய மின் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ராஜ்சமந்த், பிரதாப்கர், பில்வாரா, தோல்பூரில் உள்ள செவிலியர்  கல்லூரிகளையும் அவர் திறந்து வைத்தார். ஜுன்ஜுனு மாவட்டத்தில் கிராமப்புறக் குடிநீர் வழங்கல் மற்றும் ஃப்ளோரோசிஸ் தணிப்பு திட்டம், அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களின் கீழ் பாலி மாவட்டத்தின் 7 நகரங்களில் நகர்ப்புற குடிநீர் வழங்கல் திட்டங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நீர் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

 

***

(Release ID: 2130457)
AD/SM/SMB/PKV/SV/RR/KR


(Release ID: 2130519)