WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கலை முதல் குறியீடு வரை – வேவ்ஸ் உச்சி மாநாட்டில் இந்திய அரங்கம் பெரும் வரவேற்பைப் பெற்றது

 Posted On: 04 MAY 2025 5:10PM |   Location: PIB Chennai

வேவ்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவின் கதை சொல்லும் மரபுகளின் விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்திய அரங்கம் (பாரத் பெவிலியன்) பொதுமக்களிடமிருந்து பெரும் வரவேற்பையும் போற்றுதலையும் பெற்றுள்ளது. "கலை முதல் குறியீடு வரை" என்ற கருப்பொருளின் கீழ், வாய்மொழி மரபுகளில் இருந்தும் காட்சி மரபுகளிலிருந்தும் அதிநவீன டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் வரை ஊடக, பொழுதுபோக்குத் துறையில் இந்தியாவின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய அரிய தகவல்களை இந்த அரங்கம் வழங்கியது.

இந்திய அரங்கம், இந்தியாவின் கலை ஆன்மாவை வெளிப்படுத்தியதுடன், நமது வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இணைக்கும் வகையில் அமைந்திருந்தது. வேவ்ஸ் உச்சி மாநாட்டின் தொடக்க நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்திய அரங்கைப் பார்வையிட்டார். மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ். ஜெய்சங்கர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் அரங்கிற்கு வருகை தந்து அரங்கில் இடம் பெற்ற அம்சங்களைப் பாராட்டினர். அரங்கத்தை பெரிய எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். இது நமது நாட்டின் பல கலைப் பொக்கிஷங்களை எடுத்துரைத்து, மக்களை பிரமிப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.

 

இந்தியாவின் படைப்பிலக்கிய பயணத்தைக் கொண்டாடும் இந்திய அரங்கம், உள்ளடக்க கண்காட்சி மட்டுமல்ல,  இது இந்தியாவின் கலாச்சார ஆழம், கலை சிறப்பம்சம் உலகளாவிய கதைசொல்லலில் வளர்ந்து வரும் திறன் ஆகியவற்றையும் வெளிப்படுத்தியது.

வேவ்ஸ் மாநாட்டின் இந்திய அரங்கம், இந்தியாவின் கதைசொல்லல் மரபுகளையும் புதுமைகளின் கொண்டாட்டத்தையும் வழங்கியது. பாரம்பரியத்தில் வேரூன்றிய அதே சமயம் எதிர்காலத்தை நோக்கிய ஒரு படைப்பு சக்தியாக இந்தியாவின் அடையாளத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.

வேவ்ஸ் உச்சிமாநாடு தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடரலாம்:

எக்ஸ்:

https://x.com/WAVESummitIndia

https://x.com/MIB_India

https://x.com/PIB_India

https://x.com/PIBmumbai

இன்ஸ்டாகிராம்:

https://www.instagram.com/wavesummitindia

https://www.instagram.com/mib_india

https://www.instagram.com/pibindia

****

Release ID: 2126779

SM/PLM/RJ


Release ID: (Release ID: 2126834)   |   Visitor Counter: 22