தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவின் நேரடி நிகழ்வுகள் பொருளாதாரம்: ஒரு உத்திசார் வளர்ச்சி என்ற வெள்ளை அறிக்கையை வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிடுகிறார்
2030-ம் ஆண்டில் உலகின் முன்னணி ஐந்து பொழுதுபோக்கு இடங்களுக்குள் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும்
நேரடி நிகழ்வுகள் இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு அமைப்பில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக திகழும்
Posted On:
01 MAY 2025 1:27PM
|
Location:
PIB Chennai
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நேரடி நிகழ்வுகள் தொடர்பாக வெளியிடப்படவுள்ள முதல் வெள்ளை அறிக்கையான "இந்தியாவின் நேரடி நிகழ்வுகள் பொருளாதாரம்: ஒரு உத்திசார் வளர்ச்சி” என்ற தலைப்பிலான வெள்ளை அறிக்கையை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் திரு எல் முருகன் வெளியிடவுள்ளார்.
இந்த வெள்ளை அறிக்கை மே 3, 2025 அன்று மும்பையில் நடைபெறும் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்படும். வெள்ளை அறிக்கை இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் நேரடி பொழுதுபோக்கு துறையின் விரிவான பகுப்பாய்வை முன்வைக்கும், வளர்ந்து வரும் போக்குகள், வளர்ச்சிப் பாதை, துறையின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சிக்கான பரிந்துரைகள் இதில் இடம் பெறும்.
இந்தியாவின் நேரடி நிகழ்வுகள் சூழல் நாட்டின் கலாச்சார மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் செல்வாக்கு மிக்க தூணாக உள்ளது. 2024 முதல் 2025 வரையிலான காலம் போற்றத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாக உள்ளது. அகமதாபாத் மற்றும் மும்பையில் 'கோல்ட்ப்ளே' போன்ற சர்வதேச நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன, இது உலகளாவிய அளவிலான நிகழ்வுகளை நடத்த இந்தியாவின் தயார்நிலையை எடுத்துக்காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டில், ஒழுங்கமைக்கப்பட்ட நேரடி நிகழ்வுகள் பிரிவு 15% வளர்ச்சியைப் பதிவு செய்தது. 13 பில்லியன் ரூபாய் வருவாயை இப்பிரிவு ஈட்டியது. இது இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சூழல் அமைப்பில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக உள்ளது. தற்போதைய சூழலில் பெரிய அளவிலான நிகழ்வுகள் ஒவ்வொன்றும் சுமார் 2,000 முதல் 5,000 தற்காலிக வேலைகளை உருவாக்குகின்றன. இது வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் துறையின் வளர்ந்து வரும் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது.
திட்டமிட்ட முதலீடுகள், கொள்கை ஆதரவு, உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், சுற்றுலா, போன்றவற்றில் புதிய வழிகளைத் திறந்து, 2030-ம் ஆண்டில் உலக அளவில் முதல் ஐந்து நேரடி பொழுதுபோக்கு நாடுகளில் ஒன்றாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் பாதையில் செல்கிறது.
***
(Release ID: 2125721)
SM/PLM/SG/RJ/DL
Release ID:
(Release ID: 2125871)
| Visitor Counter:
14