பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
மேகாலயாவின் (ஷில்லாங் அருகே) மாவ்லிங்குங் முதல் அசாமின் (சில்சார் அருகே) பஞ்ச்கிராம் வரை 166.80 கி.மீ (என்எச்-6) நீளமுள்ள அதிவேக பசுமைவழித்தடத்தை அரசு-தனியார் பங்களிப்பு முறையில் மேம்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
30 APR 2025 4:05PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் மேகாலயாவின் (ஷில்லாங்கிற்கு அருகில்) மாவ்லிங்குங் முதல் அசாமின் (சில்சார் அருகே) பஞ்ச்கிராம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண். 06-ல் 166.80 கி.மீ நீளமுள்ள 4 வழி பசுமைவழி அணுகல் பாதையை அரசு-தனியார் பங்களிப்பு முறையில் அதிவேக வழித்தடமாக மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் நிர்வாகம் செய்வதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது . இதன் மொத்த மூலதனச் செலவு ரூ.22,864 கோடி ஆகும். 166.80 கி.மீ. திட்ட நீளப்பாதையில் மேகாலயாவில் 144.80 கி.மீ. மற்றும் அசாமில் 22.00 கி.மீ. உள்ளது.
முன்மொழியப்பட்ட அதிவேக பசுமைவழித்தடம், குவஹாத்தியிலிருந்து சில்சார் வரை செல்லும் போக்குவரத்தின் சேவை அளவை மேம்படுத்தும். இந்த வழித்தடத்தின் மேம்பாடு, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் அசாமின் பிரதான நிலப்பகுதியான பாரக் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் குவஹாத்தியுடனான இணைப்பை மேம்படுத்தும். பயண தூரம் மற்றும் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும்.
இந்த வழித்தடம் அசாம்-மேகாலயா இடையேயான இணைப்பை மேம்படுத்தும். மேலும் மேகாலயாவின் சிமென்ட் மற்றும் நிலக்கரி உற்பத்திப் பகுதிகள் வழியாகச் செல்வதால், மேகாலயாவில் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த வழித்தடம், நன்கு இணைக்கப்பட்ட குவஹாத்தி விமான நிலையம், ஷில்லாங் விமான நிலையம், குவஹாத்தியை சில்சார் உடன் இணைக்கும் சில்சார் விமான நிலையம் ஆகியவற்றிலிருந்து வரும் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும். இது வடகிழக்கில் உள்ள அழகிய சுற்றுலா இடங்களை இணைத்து சுற்றுலாவை மேம்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125467
******
TS/SMB/DL
(Release ID: 2125556)
Visitor Counter : 18
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Nepali
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam