WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவஸ் உச்சி மாநாடு குறித்த ஆய்வுக் கூட்டம் - மத்திய தகவல்- ஒலிபரப்பு இணையமைச்சர் திரு எல். முருகன் தலைமையில் மும்பையில் நடைபெற்றது

 Posted On: 18 APR 2025 4:19PM |   Location: PIB Chennai

மத்திய தகவல்- ஒலிபரப்பு இணையமைச்சர் திரு எல். முருகன் தலைமையில் உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2025(வேவ்ஸ் )தொடர்பான ஆய்வுக் கூட்டம் மும்பையில் இன்று (18.04.2025)  நடைபெற்றது. ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். ஒளிபரப்பு, ஏவிஜிசி-எக்ஸ்ஆர், டிஜிட்டல் மீடியா மற்றும் புத்தாக்கம், திரைப்படங்கள் ஆகிய வேவ்ஸின் முக்கிய அம்சங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வேவ்ஸ் பஜார், வேவெக்ஸ், பாரத் பெவிலியன், இந்தியாவில் கலை படைப்புகளை உருவாக்குங்கள்(கிரியேட் இன் இந்தியா) சவால்கள், பிற முன்முயற்சிகள் ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதனை விரைவுபடுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஏற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து பல்வேறு பிரிவுகளுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கிக் கூறினர்அமைச்சர் திரு எல். முருகன் மாநாட்டு அரங்கில் நிகழ்வுக்கான கள ஏற்பாடுகளையும்  மதிப்பீடு செய்தார்.

வேவ்ஸ் பற்றி:

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (M&E) துறைக்கான ஒரு மைல்கல் நிகழ்வான முதல் உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ் - WAVES), 2025 மே 1 முதல் 4 வரை மகாராஷ்டிராவின் மும்பையில் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இந்தியாவின் படைப்பாற்றல் வலிமையை வெளிப்படுத்தவும், உள்ளடக்க உருவாக்கம், அறிவுசார் சொத்துரிமை, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இந்தியாவின் நிலையை விரிவுபடுத்தவும் வேவ்ஸ் நடத்தப்படுகிறது.


Release ID: (Release ID: 2122697)   |   Visitor Counter: 54