பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி

प्रविष्टि तिथि: 18 APR 2025 10:43AM by PIB Chennai

யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும. நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானத்துக்கும் வளமான கலாச்சாரத்திற்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் என்று பிரதமர் திரு் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்!

யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானத்திற்கும், வளமான கலாச்சாரத்திற்கும் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரமாகும்.

கீதையும் நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரிகத்தையும் உணர்வையும் வளர்த்து வந்துள்ளன. அவற்றின் நுண்ணறிவுத் திறம் உலகிற்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. @UNESCO"

***

(Release ID: 2122608)

SV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2122629) आगंतुक पटल : 91
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada