பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நியூஸ் 18 தொலைக்காட்சி ஏற்பாடு செய்த எழுச்சிமிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 08 APR 2025 11:20PM by PIB Chennai

வணக்கம்!

இந்த உச்சிமாநாட்டின் மூலம் நம் நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்காக நியூஸ் 18 நிறுவனத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் நாட்டில் உள்ள இளைஞர்களின் விருப்பங்களுடன் இணைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில், விவேகானந்தர் பிறந்த தினத்தன்று, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இங்குள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர்களின் கனவுகளை மனவுறுதியின் வலிமையையும், வளர்ந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான அவர்களது ஆர்வத்தையும் காண முடிவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த அமிர்த காலம்  இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தையும், மன வலிமையையும் அளிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

இன்று, உலக நாடுகள் இந்தியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக கூறிய அவர், இன்னும் சில ஆண்டுகளில், 11-வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையிலிருந்து, 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். உலக அளவில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகக் கூறனார். பத்தாண்டுக் காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருமடங்காக உயர்ந்துள்ளது  என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் இந்தியாவை உலகின் 3-வது பெரிய  பொருளாதார நாடாக உருவெடுக்கச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இளைஞர்களால் முன்னெடுத்துச் செல்வதாக அவர் கூறினார். இளம் பாரதத்தின் இந்த லட்சியங்கள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்வதில் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

நண்பர்களே,

மத்திய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் இளைஞர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதைக் காண முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

இந்த 100 நாட்களில், திட்டங்களை செயல்படுத்துவதற்கான முடிவுகளை மட்டும் மேற்கொள்ளாமல் வலுவான எதிர்காலத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசின் கொள்கைகள் வாய்ப்புக்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். 12 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இளம் தொழில் வல்லுநர்கள் தொழில்முனைவோருக்கு பயனளிக்கும் என்று கூறினார். 10,000 புதிய மருத்துவ இடங்கள், 6,500 புதிய ஐஐடி இடங்கள் ஆகியவை உயர்கல்வியை மேலும் விரிவுபடுத்த உதவிடும் என்றும் அவர் கூறினார். 50,000 புதிய அடல் சிந்தனை ஆய்வகங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புதுமைப் படைப்புகளுக்கான ஆர்வத்தை மாணவர்களிடையே அதிகரிக்கச் செய்யும் என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு, திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு மையங்கள் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று அவர் மேலும் கூறினார். ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர், பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரையிலான கடன்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வாக்குறுதியாக  மட்டுமின்றி அரசின் கொள்கையாகவும் உள்ளது  என்று கூறினார். இது போன்ற அரசின் முடிவுகளால் இளைஞர்கள் நேரடியாக பயனடைவார்கள். இளைஞர்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்று தெரிவித்தார்.

நண்பர்களே,

இந்த 100 நாட்களில் 1,000 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். கனிம வளங்களைப் பாதுகாப்பதற்கென தேசிய இயக்கம் தொடங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். அரசுப் பணியாளர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை நிறுவுவதற்கான முடிவும் மேற்கொள்ளப்பட்டதாக அவர்  தெரிவித்தார்.  விவசாயிகளுக்கான உர மானியங்களை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார். கூடுதலாக, வக்ஃப் சட்டத்திற்கான திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நண்பர்களே,

தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் கட்டப்பட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய பாம்பன் பாலத்தின் பணிகள் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார். இது நாட்டின் முதலாவது செங்குத்து பாலம் என்று அவர் கூறினார்.

****

(Release ID 2120247)

TS/SV/KPG/RJ


(Release ID: 2120899) Visitor Counter : 13