தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நாட்டின் அடுத்த தலைமுறைக்கான கலைஞர்களை தயார் செய்யும் வகையில் மெய்நிகர் காட்சிகள் தொடர்பான கருத்தரங்கு
Posted On:
27 MAR 2025 2:10PM by PIB Chennai
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஆப்டெக் நிறுவனம் மற்றும் லிமிடெட் மற்றும் இந்திய அனிமேஷன் மெய்நிகர் காட்சிகள், மின்னணு விளையாட்டு கூட்டமைப்புடன் இணைந்து பொழுதுபோக்கு தொடர்பான கருத்தரங்கை தொடங்கியுள்ளது. இந்த கருத்தரங்கில் பொழுதுபோக்கு சார்ந்த மெய்நிகர் வடிவிலான காட்சிகளை வடிவமைப்பதற்கான போட்டிக்கு பங்கேற்பாளர்களை தயார் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். நாட்டின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவதன் மூலும் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், அடுத்த தலைமுறை மெய்நிகர் காட்சி வடிவமைப்பாளர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும் இது ஒரு முக்கிய படி நிலையாகும்.
பொழுதுபோக்கு சார்நத் மெய்நிகர் வடிவமைப்பில் ஆர்வமுள்ள கலைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கும், அத்துறையில் சிறந்த நிபுணத்துவம் பெறுவதற்கும் இதுபோன்ற கருத்தரங்குகள் உதவிடும். இந்த கருத்தரங்குகள் அதுசார்ந்த தொழில்துறை வளர்ச்சிக்கும், மேம்பட்ட மெய்நிகர் காட்சி தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115661
***
TS/SV/RJ/DL
(Release ID: 2115952)
Visitor Counter : 23
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam