உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், போதைப் பொருளுக்கு எதிரான சமரசமற்ற கொள்கையின் ஒரு பகுதியாக 2024-ஆம் ஆண்டில் ரூ.25,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

Posted On: 10 FEB 2025 7:16PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், போதைப் பொருளுக்கு எதிரான சமரசமற்ற கொள்கையின் அமலாக்கத்தின் போது, தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு  (என்.சி.பி) உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்ட அமலாக்க நிறுவனங்களும் 2024-ஆம் ஆண்டில், ​​தோராயமாக ரூ.25,330 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தன. பிரதமர் திரு மோடியின் தலைமையிலும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழும் கடைப்பிடிக்கப்பட்ட ‘கீழ்-மேல்’, ‘மேல்-கீழ்’ அணுகுமுறைக்கு இது ஒரு சான்றாகும். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முழுமையான அரசு என்ற  அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது.

2024-ஆம் ஆண்டில், உயர் மதிப்பிலான அதிக தீங்கு விளைவிக்கும் மற்றும் செயற்கை போதை மருந்துகள், கொக்கைன் மற்றும் மனோவியல் பொருட்களாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் பறிமுதல் கணிசமாக அதிகரித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட, மெத்தாம்பெட்டமைன் போன்ற ஏ.டி.எஸ் (ஆம்பெடமைன்-வகை தூண்டுதல்கள்) அளவு 2023-ஆம் ஆண்டின்  34 குவிண்டால்களில் இருந்து 2024 இல் 80 குவிண்டால்களாக இருமடங்காக அதிகரித்துள்ளது. அதேபோன்று பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் அளவும் 2023 இல் 292 கிலோவிலிருந்து 2024 இல் 1426 கிலோவாக அதிகரித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மெபெட்ரோனின் அளவு 2024 இல் 3391 கிலோவாக இருந்தது, இது 2023 இல் 688 கிலோவாக பதிவானது. அதேபோல், 2023 இல் 34 குவிண்டாலாக இருந்த ஹஷிஷ் போதைப்பொருள் 2024 இல் 61 குவிண்டாலாக உயர்ந்துள்ளது. போதை பொருளாக  தவறாகப் பயன்படுத்தப்படும் மனோவியல் பொருட்களின் எண்ணிக்கை 1.84 கோடியிலிருந்து 4.69 கோடியாக உயர்ந்துள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101471

 

***

RB/DL


(Release ID: 2101557) Visitor Counter : 31