மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பரிக்ஷா பே சர்ச்சா எனும் தேர்வு குறித்த கலந்துரையாடல் - நாளை பங்கேற்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி

Posted On: 09 FEB 2025 12:21PM by PIB Chennai


 

தேர்வுகள் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் "பரிக்ஷா பே சர்ச்சா" (பிபிசி) எனப்படும் "பரீட்சைக்கு பயமேன்" என்ற தேர்வு குறித்த கலந்துரையாடல் முன்முயற்சி இந்தச் சூழலை மாற்றியுள்ளது.

நாளை (2025 பிப்ரவரி 10) காலை 11 மணிக்கு, இந்த ஆண்டின் பரிக்‌ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி நடைபெறுகிறது.  இதில் பிரதமர் நேரடியாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் அவர் கலந்துரையாடுவார். பரிக்‌ஷா பே சர்ச்சா எனப்படும் இந்த தேர்வு குறித்த கலந்துரையாடல் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு தொடர்பான கவலையை சமாளிப்பதற்கான புதுமையான அணுகுமுறைகளை எடுத்துக்காட்டுகிறது. கற்றலையும் வாழ்க்கையையும் ஒரு கொண்டாட்ட அணுகுமுறையாக இது மாற்றுகிறது்.

சாதனை படைத்த பிபிசி 2025:

நாளை (10 பிப்ரவரி 2025) திட்டமிடப்பட்டுள்ள தேர்வு குறித்த கலந்துரையாடலின் 8வது ஆண்டு நிகழ்வு ஏற்கனவே ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளது. 5 கோடிக்கும் அதிகமானவர்களின் பங்கேற்புடன், இந்த ஆண்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது கற்றலின் கூட்டு கொண்டாட்டத்திற்கு ஊக்கமளிக்கிறது.

இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சிக்கு, அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களிலிருந்து, மாநில / யூனியன் பிரதேச அரசுப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளி, ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி, சிபிஎஸ்இ, நவோதயா வித்யாலயா ஆகியவற்றிலிருந்து 36 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடுவார்கள்.

பரிக்ஷா பே சர்ச்சா 2025 ஏழு நுண்ணறிவு அத்தியாயங்களைக் கொண்டிருக்கும். இது பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆளுமைகளை ஒன்றிணைத்து, வாழ்க்கையின் அத்தியாவசிய அம்சங்களில் மாணவர்களுக்கு வழிகாட்டும். ஒவ்வொரு அத்தியாயமும் முக்கிய கருப்பொருள்களை உரையாற்றும்:

விளையாட்டு, ஒழுக்கம் குறித்து மேரி கோம், அவனி லெகாரா, சுஹாஸ் யதிராஜ் ஆகியோர் பேசுவார்கள்.மன ஆரோக்கியம் குறித்து தீபிகா படுகோனே பேசுவார்.

ஊட்டச்சத்து, தொழில்நுட்பம், நிதி, நேர்மறை சிந்தனைகள், நினைவாற்றல், மன அமைதி போன்றவை குறித்தும் சம்பந்தப்பட்ட வல்லுனர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.

பரிக்ஷா பே சர்ச்சா எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடலின் தாக்கம்:

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை கடந்து தேர்வை நேர்மறையானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சி உருவெடுத்துள்ளது.  கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமும், தீர்வுகளை வழங்குவதன் மூலமும், பிரதமர் திரு நரேந்திர மோடி கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, மாணவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளார். திட்டத்தின் உள்ளடக்கம், டிஜிட்டல் அணுகல், புதுமையான அணுகுமுறைகள் ஆகியவை இந்தியாவில் மாணவர் ஈடுபாட்டின் தொடர்ச்சியான வெற்றியை உறுதி செய்கின்றன. தேர்வுகள் முடிவல்ல, ஒரு தொடக்கம் என்ற செய்தியை ஒவ்வொரு ஆண்டும் இந்த கலந்துரையாடல் எடுத்துறைக்கிறது!

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:

https://www.education.gov.in/documents_reports?field_documents_reports_tid=All&field_documents_reports_category_tid=All&title=&page=1

https://innovateindia1.mygov.in/#skip-main

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092794

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2000010

https://pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1561793

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2100184

***

PLM/KV

 

 


(Release ID: 2101120) Visitor Counter : 38