நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அடுத்த ஐந்தாண்டுகள் 'அனைவருக்கும் வளர்ச்சி' என்பதை உணர்வதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு; மத்திய பட்ஜெட் 2025-26

Posted On: 01 FEB 2025 1:01PM by PIB Chennai

அடுத்த ஐந்தாண்டுகள் 'அனைவருக்கும் வளர்ச்சி' என்பதை உணர்வதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு  என்று  மத்திய நிதி, பெரு நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அவர் இன்று தாக்கல் செய்தபோது இதனைத் தெரிவித்தார். அனைத்து முக்கிய உலகப் பொருளாதாரங்களிலும் நமது பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் வளர்ச்சி சாதனைகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், இந்தக்  காலகட்டத்தில்தான் இந்தியாவின் திறன் மீதான நம்பிக்கை வளர்ந்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

மத்திய பட்ஜெட் 2025-26, வளர்ச்சியை விரைவுபடுத்துதல், உள்ளடக்கிய வளர்ச்சியைப் பாதுகாத்தல், தனியார் துறை முதலீடுகளை ஊக்குவித்தல், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் செலவின ஆற்றலை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான அரசின் முயற்சிகளை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

 

வேளாண்மை, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, முதலீடு மற்றும் ஏற்றுமதி ஆகியவை வளர்ச்சிப் பயணத்தில் நான்கு சக்திவாய்ந்த இயந்திரங்களாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.  அடுத்த ஐந்து ஆண்டுகளில், வரிவிதிப்பு, மின்சாரத் துறை, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித் துறை மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் ஆகியவை நமது வளர்ச்சித் திறனையும் உலகளாவிய போட்டித்தன்மையையும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். வளர்ச்சிப் பயணத்தில், “நமது சீர்திருத்தங்கள்” எரிபொருளாக உள்ளது என்றும், அதில் வளர்ச்சியடைந்த இந்தியா என்பது இலக்காக உள்ளது என்றும் தெரிவித்தார்.

 

வேளாண் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனை ஊக்குவித்தல்; கிராமப்புற செழிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது; இந்தியாவில் உற்பத்தியை மேம்படுத்துதல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை ஆதரித்தல்; வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சியை செயல்படுத்துதல்; மக்கள், பொருளாதாரம் மற்றும் புதுமைகளில் முதலீடு செய்தல்; ஏற்றுமதியை ஊக்குவித்தல்; மற்றும் புதுமையை வளர்ப்பது ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளதாக  அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098370

***

TS/IR/AG/KR

 

 


(Release ID: 2098439) Visitor Counter : 33