நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ந்த பாரதம் @ 2047ஐ அடைய, உள்கட்டமைப்புத் துறையில் தனியார் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பொருளாதார ஆய்வறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

प्रविष्टि तिथि: 31 JAN 2025 1:59PM by PIB Chennai

அதிக வளர்ச்சி விகிதத்தைத் தக்க வைத்துக்  கொள்வதற்கு, அடுத்த இரண்டு தசாப்தங்களில் உள்கட்டமைப்பு முதலீட்டை இந்தியா தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள்  அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் சமூக உள்கட்டமைப்பை உருவாக்குவது அரசின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. உள்கட்டமைப்புச்  செலவின அதிகரிப்பு, ஒப்புதல்களில் உள்ள தடைகளைக் குறைப்பதற்கான நிறுவனங்களை உருவாக்கி செயல்படுத்துதல் மற்றும் வளங்களைத் திரட்டுவதில் புதுமையான முறைகள் என இது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது.  வளர்ந்த பாரதம் @2047 இன் தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளை பொது மூலதனத்தால்  மட்டுமே பூர்த்தி செய்ய முடியாது என்று அறிக்கை கூறுகிறது.

திட்டங்களை கருத்து நிலையில் உருவாக்குவதற்கான ச திறனை மேம்படுத்துவதன் மூலம் உள்கட்டமைப்பில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் உள்கட்டமைப்பில் பொதுத்துறை-தனியார் பங்களிப்பின் அவசியத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதுடன், மத்திய அரசின் முயற்சிகளுக்குத் துணை நிற்க வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

தேசிய உள்கட்டமைப்புத் திட்டம், தேசிய பணமாக்கல் திட்டம் மற்றும்  பிரதமரின் விரைவு சக்தி போன்ற பல தடைகளை தளர்த்தும் மற்றும் வசதி அளிக்கும் வழிமுறைகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. நிதிச் சந்தை ஒழுங்குமுறை ஆணையங்கள் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இருப்பினும், பல முக்கிய துறைகளில் தனியார் நிறுவனங்களின் பயன்பாடு குறைவாகவே உள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை  குறிப்பிடுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097896

***

TS/RB/DL

 

 


(रिलीज़ आईडी: 2098276) आगंतुक पटल : 87
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Assamese , English , Urdu , हिन्दी , Nepali , Marathi , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam