பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமாக குடியரசுத் தலைவர் இன்று ஆற்றிய உரை, வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதை நோக்கிய பாதையை எதிரொலிப்பதாக அமைந்துள்ளது: பிரதமர்
இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகளைக் கொண்ட இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை அவரது உரை உள்ளடக்கியுள்ளது: பிரதமர்
Posted On:
31 JAN 2025 2:43PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமாக குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது வளர்ச்சியடைந்த இந்தியாவின் முன்னேற்றத்திற்கான பயணத்தின் ஒரு விரிவான தொலைநோக்குப் பார்வை என்று அவர் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பல்வேறு துறைகளில் முக்கிய முயற்சிகளை எடுத்துரைத்ததாகவும், அனைத்து துறைகளிலும் எதிர்கால வளர்ச்சியின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டியதாகவும் திரு. மோடி கூறியுள்ளார்.
இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான சிறந்த வாய்ப்புகளைக் கொண்ட இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையைக் குடியரசுத் தலைவரின் உரை உள்ளடக்கியுள்ளதாக திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரை, கடந்த பத்தாண்டுகளில் நமது நாட்டின் கூட்டு சாதனைகளை அழகாகச் சுருக்கமாகக் கூறியதுடன், நமது எதிர்கால விருப்பங்களையும் உள்ளடக்கி இருப்பதாக திரு. மோடி மேலும் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமாக இன்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதை நோக்கிய நமது நாட்டின் பாதையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்துள்ளார். மேலும் எதிர்கால வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான சிறந்த வாய்ப்புகளைக் கொண்ட இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை அவரது உரை உள்ளடக்கி இருக்கிறது. ஒற்றுமை மற்றும் உறுதியுடன் நாம் நிர்ணயித்த இலக்குகளை அடைவதற்கான ஊக்கமளிக்கும் வழிகாட்டுதல்களும் இந்த உரையில் இடம்பெற்றுள்ளன."
"கடந்த பத்தாண்டுகளில் நமது நாட்டின் கூட்டு சாதனைகளை குடியரசுத் தலைவரின் உரை அழகாகச் சுருக்கமாகக் கூறியதுடன், நமது எதிர்கால விருப்பங்களையும் உள்ளடக்கியுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கிராமப்புற வளர்ச்சி, தொழில்முனைவு, விண்வெளி மற்றும் பலவற்றில் முன்னேற்றங்களை இந்த உரை உள்ளடக்கியுள்ளது."
***
TS/PKV/RR/KR/DL
(Release ID: 2098079)
Visitor Counter : 25
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam