பிரதமர் அலுவலகம்
வாஷிங்டன்டி.சியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 JAN 2025 9:09AM by PIB Chennai
வாஷிங்டன் டி.சியில் நிகழ்ந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், அமெரிக்க மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;
"வாஷிங்டன் டி.சி.யில் நடந்த துயரமான விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்க மக்களுடன் சேர்ந்து நாங்கள் துணை நிற்கிறோம். @realDonaldTrump"
TS/BR/KR
***
(Release ID: 2097783)
(வெளியீட்டு அடையாள எண்: 2097863)
வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam