தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாகும்பமேளாவில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பணிகள் குறித்து துறையின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 23 JAN 2025 10:08PM by PIB Chennai

மகா கும்பமேளாவில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு ஊடகப் பிரிவுகள் மேற்கொண்டு வரும் பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தால் மகாகும்பமேளாவின் திரிவேணி மார்க்கில் உள்ள கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் பல்லூடககா கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

இந்த மல்டிமீடியா கண்காட்சி மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

மகா கும்பமேளா பகுதியில் அமைந்துள்ள ஊடக மையத்தையும் பார்வையிட்ட திரு சஞ்சய் ஜாஜு, இங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அங்கு பத்திரிகையாளர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

முன்னதாக, மகா கும்பமேளா பகுதியின் பிரிவு 4-ல் அமைந்துள்ள தூர்தர்ஷன் மற்றும் ஆகாஷ்வாணியின் தற்காலிக மையத்தையும் செயலாளர் பார்வையிட்டார்.

***

(Release ID: 2095647)

TS/PLM/AG/KR

 


(रिलीज़ आईडी: 2095798) आगंतुक पटल : 58
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam