பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 28 DEC 2024 9:10PM by PIB Chennai

 

பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

திரு அரவிந்த் ஸ்ரீனிவாஸின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"உங்களுடனான சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு, அதன் பயன்பாடுகள், அதன் பரிணாம வளர்ச்சி பற்றி விவாதித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நீங்கள் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ (@perplexity_ai) நிறுவனத்தின் மூலம் சிறந்த பணிகளைச் செய்வதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

 

**********

PLM/KV
 


(Release ID: 2088701) Visitor Counter : 29