உள்துறை அமைச்சகம்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் 26.12.2024 முதல் 01.01.2025 வரை ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்
Posted On:
27 DEC 2024 3:05AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் 26.12.2024 அன்று புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் என்று இந்திய அரசு ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் 26.12.2024 முதல் 01.01.2025 வரை இரண்டு நாட்களையும் சேர்த்து ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தேசியக் கொடி வழக்கமாக பறக்கவிடப்படும் இடங்களில் இந்தக் காலகட்டத்தில், கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேற்குறிப்பிட்ட தினங்களில் அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது. மறைந்த டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களிலும் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
***
TS/BR/KV
(Release ID: 2088324)
Visitor Counter : 38
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam