பிரதமர் அலுவலகம்
நித்தி ஆயோக்கில் பிரபல பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் சந்திப்பு
கூட்டத்தின் கருப்பொருள்: உலகின் நிச்சயமற்ற காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பராமரித்தல்
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் மனப்பாங்கை முற்றாக மாற்றுவதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைய முடியும்: பிரதமர்
வேலைவாய்ப்பை உருவாக்குதல், திறன் மேம்பாடு, வேளாண் உற்பத்தியை அதிகரித்தல், முதலீடுகளை ஈர்த்தல், ஏற்றுமதியை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைகளைப் பகிர்ந்தனர்
Posted On:
24 DEC 2024 6:47PM by PIB Chennai
2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தயாரிப்புக்காக புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நித்தி ஆயோக்கில் கலந்துரையாடினார்.
"உலகின் நிச்சயமற்ற காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை பராமரித்தல்" என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கலந்து கொண்ட நிபுணர்களின் ஆழமான கருத்துக்களுக்கு பிரதமர் தமது உரையில் நன்றி தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதில் கவனம் செலுத்தும் வகையில் மனப்பாங்கை முற்றாக மாற்றுவதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைய முடியும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
உலகின் நிச்சயமற்ற பொருளாதாரத் தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது, குறிப்பாக இளைஞர்களிடையே வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான உத்திகள், துறைகளில் நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான உத்திகள், வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை சீரமைப்பதற்கான உத்திகள், வேளாண் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நிலையான கிராமப்புற வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தனியார் முதலீட்டை ஈர்த்தல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பொது நித்தியைத் திரட்டுதல், நித்தி உள்ளடக்கத்தை ஊக்குவித்தல், ஏற்றுமதியை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தல்
உட்பட பல குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் குறித்து பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
டாக்டர் சுர்ஜித் எஸ் பல்லா, டாக்டர் அசோக் குலாட்டி, டாக்டர் சுதிப்தோ முண்ட்லே, திரு தர்மகீர்த்தி ஜோஷி, திரு ஜன்மேஜயா சின்ஹா, திரு மதன் சப்னாவிஸ், பேராசிரியர் அமிதா பத்ரா, திரு ரிதம் தேசாய், பேராசிரியர் சேத்தன் காடே, பேராசிரியர் பாரத் ராமசாமி, டாக்டர் சவுமியா காந்தி கோஷ், திரு சித்தார்த்த சன்யால், டாக்டர் லவீஷ் பண்டாரி, செல்வி ரஜனி சின்ஹா, பேராசிரியர் கேசப் தாஸ், டாக்டர் பிரீதம் பானர்ஜி, திரு ராகுல் பஜோரியா, திரு நிகில் குப்தா, பேராசிரியர் ஷஷ்வத் அலோக் உட்பட பல புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இந்த உரையாடலில் பங்கேற்றனர்.
***
TS/SMB/AG/DL
(Release ID: 2087716)
Visitor Counter : 21