பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பேராயர் ஜார்ஜ் கூவக்காட் கர்டினலாக போப் பிரான்சிஸால் நியமிக்கப்படுவது இந்தியாவுக்குப் பெருமை அளிக்கிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 07 DEC 2024 8:48PM by PIB Chennai

பேராயர் ஜார்ஜ் கூவக்காட் கர்டினாலாக போப் பிரான்சிஸால் நியமிக்கப்படுவது இந்தியாவுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பேராயர் ஜார்ஜ் கூவக்காட் கர்டினாலாக போப் பிரான்சிஸால் நியமிக்கப்படுவது இந்தியாவுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்க மத்திய இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் தலைமையிலான குழுவை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

விழாவிற்கு முன்னதாக, இந்திய பிரதிநிதிகள் போப் பிரான்சிஸைச் சந்தித்தனர். @Pontifex @GeorgekurianBjp"

***

PLM /DL


(வெளியீட்டு அடையாள எண்: 2082093) வருகையாளர் எண்ணிக்கை : 53