பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு அதிக முன்னுரிமை அளித்து சுகாதாரத் துறையில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2024 5:02AM by PIB Chennai

ஆரோக்கியமான பூமி சிறந்த கிரகம் என்று குறிப்பிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கு அதிக முன்னுரிமை அளித்து சுகாதாரத் துறையில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்த விஷயத்தில் உலகளாவிய முயற்சிகளை இந்தியா வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

"அன்புள்ள துளசி பாய்,

ஆரோக்கியமான கிரகமே சிறந்த கிரகமாகும். இந்தத் துறையில் இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கும் நாங்கள் அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம். அதே நேரத்தில், இந்த விஷயத்தில் உலகளாவிய முயற்சிகளை நாங்கள் வலுப்படுத்துவோம். @DrTedros"

***

(Release ID: 2074830)


(வெளியீட்டு அடையாள எண்: 2074938) வருகையாளர் எண்ணிக்கை : 94