பிரதமர் அலுவலகம்
சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம் குறித்த ஜி-20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
18 NOV 2024 9:19PM by PIB Chennai
'சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் ஜி 20 மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்ததற்காகவும், சிறப்பான விருந்தோம்பலுக்காகவும் பிரேசில் அதிபர் மேதகு திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட பிரேசிலின் ஜி 20 செயல்திட்டத்தைப் பாராட்டிய அவர், இந்த அணுகுமுறை உலகளாவிய தெற்கின் கவலைகளை எடுத்துக்காட்டுகிறது என்றும் புதுதில்லி ஜி 20 உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் அழைப்பு ரியோ உரையாடல்களில் தொடர்ந்து எதிரொலிக்கிறது என்பதை அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
பசி மற்றும் வறுமையை சமாளிக்க இந்தியா மேற்கொண்டுள்ள முன்முயற்சிகள் பற்றி பேசிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 250 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது என்றும், நாட்டில் 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்களை விநியோகித்து வருவதாகவும் குறிப்பிட்டார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் விரிவாக எடுத்துரைத்தார்.
ஆப்பிரிக்காவிலும் பிற இடங்களிலும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துரைத்தார். இது தொடர்பாக, பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை நிறுவுவதற்கான பிரேசிலின் முன்முயற்சியை அவர் வரவேற்றார், தற்போதைய மோதல்களால் உருவாக்கப்பட்டுள்ள உணவு, எரிபொருள் மற்றும் உர நெருக்கடிகளால் உலகளாவிய தெற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, எனவே அவர்களின் கவலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074422
TS/BR/KR
(Release ID: 2074422)
***
(रिलीज़ आईडी: 2074509)
आगंतुक पटल : 99
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Telugu
,
Manipuri
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam