இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்வு குறித்த அறிவிப்பை டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்

Posted On: 18 NOV 2024 2:33PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, தேசிய இளைஞர் விழா 2025-ஐ அறிவித்தார். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை எதிரொலிக்கும் வகையில், மறுவடிவமைக்கப்பட்ட இந்த திருவிழா "வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்" என்று அழைக்கப்படும். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கான தங்களது கருத்துக்கள் மற்றும் கண்ணோட்டங்களை தெரிவிக்க இளம் இந்தியர்களுக்கு இந்த ஆற்றல் வாய்ந்த தளம் வாய்ப்பு அளிக்கும்.

வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடலின் முக்கிய நோக்கங்களை சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, "இந்த விழா இளம் திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வளர்ச்சியடைந்த பாரதம் குறித்த அவர்களின் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்குகிறது. பிரதமருடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கான தங்கள் யோசனைகளை முன்வைப்பதற்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய வாயிலாக இருக்கும். இதன் மூலம் அரசியல் மற்றும் குடிமையியலில் இளைஞர்களின் ஈடுபாட்டை மேம்படுத்தும்.

சுற்று 1: வளர்ச்சியடைந்த பாரதம் வினாடி வினா

ஒரு தனிநபர் (15-29 வயதுடையவர்) 2024 25 நவம்பர்  முதல் டிசம்பர் 5 வரை மேரா யுவ பாரத் (MY Bharat) தளத்தில் நடத்தப்படும் டிஜிட்டல் வினாடி வினாவில் பங்கேற்கலாம்..

சுற்று 2: கட்டுரை / வலைப்பதிவு எழுதுதல்

முந்தைய சுற்றில் வெற்றி பெற்றவர்கள், 'வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான தொழில்நுட்பம்', 'வளர்ச்சியடைந்த பாரத்துக்காக இளைஞர்களை மேம்படுத்துதல்' போன்ற அடையாளம் காணப்பட்ட 10 கருப்பொருள்களில் கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள். இந்த போட்டி மை பாரத் தளத்திலும் நடத்தப்படும்.

வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025 தொடர்பான அனைத்து விவரங்களையும் மை பாரத் தளத்தில் (https://mybharat.gov.in/)  அறிந்துகொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074242

***

TS/IR/RS/KR


(Release ID: 2074299) Visitor Counter : 20