பிரதமர் அலுவலகம்
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் மேம்பாட்டுக்கான குவாட் கோட்பாடுகள்
Posted On:
21 SEP 2024 11:55PM by PIB Chennai
குவாட் உறுப்பினர்களாகிய நாங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், அமைப்புகள் சமூகங்கள் ஆகியவற்றை சிறப்பாக மாற்றுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளோம். மேலும் நிலையான வளர்ச்சிக்கான ஐ.நா 2030 செயல்திட்ட இலக்குகளை அடைவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறோம். டிஜிட்டல்மயமாக்கலின் ஆற்றலை மேம்படுத்தும் அதே வேளையில், நமது பகிரப்பட்ட வளம், நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு உள்ளடக்கிய, திறந்த, நீடித்த, நியாயமான, பாதுகாப்பான, நம்பகமான டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) என்பது பாதுகாப்பான, நம்பகமான, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட டிஜிட்டல் அமைப்புகளின் தொகுப்பாக விவரிக்கப்படும் ஒரு வளர்ந்து வரும் கருத்தாகும். சமமான அணுகலை வழங்குவதற்கும் பொது சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் பின்வரும் கொள்கைகளை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
உள்ளடக்கம், இறுதி பயனர்களுக்கு அதிகாரமளித்தல், கடைசி நிலை அணுகல், தொழில்நுட்ப அல்லது சமூக தடைகளை அகற்றுதல்
இயங்குதன்மை: சட்ட பரிசீலனைகள், தொழில்நுட்ப தடைகளை கருத்தில் கொண்டு, சாத்தியமான இடங்களில், தொழில்நுட்ப நடுநிலை அணுகுமுறையுடன் செயல்பாட்டுத்தன்மையை மேம்படுத்துதல்.
பாதுகாப்பு, தனியுரிமை, ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை, பொது நன்மை, நம்பிக்கை, குறைகளைக் களைதல், நிலைத்தன்மை, போதுமான நிதி, தொழில்நுட்ப ஆதரவு, திட்டமிடல், வடிவமைத்தல், கட்டமைத்தல், இயக்குதல் ஆகியவற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்த அணுகுமுறையை பின்பற்றுதல் போன்றவையும் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, உள்ளிட்டவற்றுடன் கூடிய செயல்திட்டத்தை செயல்படுத்துவதும் இதன் முக்கிய கொள்கையாகும்.
***
(Release ID: 2057472)
TS/PLM/AG/KR
(Release ID: 2071099)
Visitor Counter : 20