பிரதமர் அலுவலகம்
தாய்லாந்து பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ராவின் செயலுக்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
Posted On:
30 OCT 2024 9:38PM by PIB Chennai
தாய்லாந்து பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ராவின் செயலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேதகு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா, பாங்காக்கில் குட்டி இந்தியாவில் உள்ள பஹுரத்தில் அற்புதமான தாய்லாந்து தீபாவளி விழா 2024-ஐ இன்று தொடங்கி வைத்தார். அற்புதமான தாய்லாந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கலாச்சார பிணைப்பை ஆழப்படுத்தும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"பிரதமர் பெடோங்டார்ன் ஷினவத்ராவின் செயலால் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான தாய்லாந்து தீபாவளி பண்டிகைக்கு எனது வாழ்த்துகள். இது இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்பை ஆழப்படுத்தட்டும்"
@ingshin
***
(Release ID: 2069741)
TS/SMB/AG/KR
(Release ID: 2070536)
Visitor Counter : 22
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam