பிரதமர் அலுவலகம்
திரு நாராயண் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2024 3:04PM by PIB Chennai
இந்திய அரசியல் மற்றும் சமூக சேவையில் ஒப்பற்ற தலைவரான திரு நாராயண் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள இதயபூர்வ இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
"அரசியல் மற்றும் சமூக சேவைக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய நாராயண் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். புலாய் பாய் என்று நாம் அறிந்த இவர் பிஜேபியின் பழமையான, கடின உழைப்பாளிகளில் ஒருவர் ஆவார். மக்கள் நலன் தொடர்பான அவரது பணிகள் எப்போதும் நினைவுகூரப்படும். இந்தத் துயரமான நேரத்தில், அவரது அபிமானிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!"
*****
TS/SMB/RS/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2070151)
வருகையாளர் எண்ணிக்கை : 67
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam