பிரதமர் அலுவலகம்
16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே, சீன அதிபருடனான இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
23 OCT 2024 7:35PM by PIB Chennai
மதிப்பிற்குரிய சீன அதிபர் அவர்களே,
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கூறியது போல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முறைப்படி நாம் சந்திக்கிறோம்.
இந்தியா-சீனா உறவின் முக்கியத்துவம் நமது மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக அளவிலும் முக்கியமானது என்று நம்புகிறோம்.
உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு நமது உறவுகள் முக்கியமானவை.
சீன அதிபர் அவர்களே,
பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் ஆகியவை நமது உறவுகளின் அடிப்படையாகத் தொடர வேண்டும்.
இந்த பிரச்சினைகள் அனைத்தையும் விவாதிக்க இன்று நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாம் திறந்த மனதுடன் விவாதிப்போம். நமது விவாதம் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
நன்றி.
பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.
----
TS/PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2067489)
आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Odia