பிரதமர் அலுவலகம்
உடானின் 8-வது ஆண்டு நிறைவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார்
प्रविष्टि तिथि:
21 OCT 2024 12:31PM by PIB Chennai
இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய உடான் (நாட்டின் சாமானிய குடிமக்கள் விமானத்தில் பறந்து செல்லும்) திட்டத்தின் 8வது ஆண்டு நிறைவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நினைவுகூர்ந்தார்.
இந்த முதன்மை முயற்சியின் முக்கிய தாக்கங்களையும் திரு மோடி எடுத்துரைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"இன்று, இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையை மாற்றியமைத்த ஒரு முயற்சியை #8YearsOfUDAN நாம் நினைவுகூர்கிறோம். விமான நிலையங்களின் எண்ணிக்கையில் இருந்து அதிக விமானப் பாதைகள் வரை, இந்தத் திட்டம் கோடிக்கணக்கான மக்களுக்கு விமானப் பயணத்திற்கான அணுகலை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், வணிகம் மற்றும் வர்த்தகத்தை அதிகரிப்பதிலும் பிராந்திய வளர்ச்சியிலும் இது பெரும் தாக்கத்தை கொண்டுள்ளது. வரும் காலங்களில், விமானப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தி, மக்களுக்கு இன்னும் சிறந்த இணைப்பு மற்றும் வசதியில் கவனம் செலுத்துவோம்."
******
(Release ID: 2066617)
SMB/RS/KR
(रिलीज़ आईडी: 2066661)
आगंतुक पटल : 84
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Bengali
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam