குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

'தூய்மையான, ஆரோக்கியமான சமுதாயத்திற்கான ஆன்மீகம்' குறித்த உலகளாவிய உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 04 OCT 2024 11:36AM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் இன்று (அக்டோபர் 4, 2024) பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயா ஏற்பாடு செய்திருந்த 'தூய்மையான, ஆரோக்கியமான சமூகத்திற்கான ஆன்மீகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற உலகளாவிய உச்சி மாநாட்டில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், ஆன்மீகம் என்பது மதமாக இருப்பதோ அல்லது உலக நடவடிக்கைகளை கைவிடுவதோ அல்ல என்று கூறினார். ஆன்மீகம் என்பது உள்ளே இருக்கும் சக்தியை அங்கீகரித்து நடத்தையிலும் எண்ணங்களிலும் தூய்மையைக் கொண்டுவருவதாகும்  என அவர் தெரிவித்தார். எண்ணங்கள், செயல்களில் தூய்மை என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் சமநிலையையும் அமைதியையும் கொண்டுவருவதற்கான வழியாகும் என்று அவர் தெரிவித்தார். ஆரோக்கியமான, தூய்மையான சமுதாயத்தை உருவாக்குவதற்கு இது அவசியமாகும் என அவர் கூறினார்.

ஆன்மீகம் என்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஒரு வழி மட்டுமல்ல என்றும், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாகவும் அது உள்ளது எனவும் குடியரசுத்தலைவர் கூறினார். நமது உள்ளார்ந்த தூய்மையை நாம் அடையாளம் காண முடிந்தால் மட்டுமே ஆரோக்கியமான, அமைதியான சமுதாயத்தை நிறுவுவதற்கு நம்மால் பங்களிக்க முடியும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.

----

(Release Id 2061867)

PLM/KPG/KR



(Release ID: 2061945) Visitor Counter : 20