பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் அமைச்சரவை முடிவைப் பிரதமர் வரவேற்றுள்ளார்

Posted On: 03 OCT 2024 10:05PM by PIB Chennai

மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் அமைச்சரவை முடிவைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின் அசாமியர்கள் இப்போது செம்மொழி அந்தஸ்தைப் பெறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அசாமிய கலாச்சாரம் பல நூற்றாண்டுகளாக செழித்து வளர்ந்துள்ளது, மேலும் இது நமக்கு வளமான இலக்கியப்  பாரம்பரியத்தை வழங்கியுள்ளது. இந்த மொழி வரும் காலங்களில் இன்னும் பிரபலமாகட்டும். என் வாழ்த்துக்கள்.

"சிறந்த வங்காள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக துர்கா பூஜையின் புனித நேரத்தில். பெங்காலி இலக்கியம் பல ஆண்டுகளாக எண்ணற்ற மக்களுக்கு ஊக்கமளித்துள்ளது. இதற்காக உலகெங்கிலும் உள்ள அனைத்து வங்காள மொழி பேசுபவர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

"மராத்தி இந்தியாவின் பெருமை.

இந்த அற்புதமான மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதற்கு வாழ்த்துக்கள். இந்த கௌரவம் நமது நாட்டின் வரலாற்றில் மராத்தியின் வளமான கலாச்சாரப் பங்களிப்பை அங்கீகரிக்கிறது. மராத்தி எப்போதும் இந்தியப் பாரம்பரியத்தின் மூலைக்கல்லாக இருந்து வருகிறது.

செம்மொழி என்ற அந்தஸ்து கிடைத்தால், இன்னும் பலர் அதைக் கற்றுக்கொள்ள ஊக்கம் பெறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

"பாலி மொழியும் பிராகிருதமும் இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேராக உள்ளன. இவை ஆன்மிகம், ஞானம், தத்துவம் சார்ந்த மொழிகள். இவை  இலக்கிய மரபுகளுக்காகவும் அறியப்படுபவை . செம்மொழிகளாக இவற்றை அங்கீகரித்திருப்பது இந்திய சிந்தனை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் காலங்காலமாக இவை  செலுத்திய தாக்கத்திற்கு மதிப்பளிக்கிறது .

இவற்றை செம்மொழிகளாக அங்கீகரிப்பது தொடர்பான அமைச்சரவை முடிவுக்குப் பின், அதிகமான மக்கள் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள  ஊக்கம் பெறுவார்கள்  என்று நான் நம்புகிறேன். இது மிகவும் மகிழ்ச்சியான தருணம்!"

 

******

(Release ID: 2061748)

SMB/RR/KR


(Release ID: 2061843) Visitor Counter : 45