உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டங்கள்- புது தில்லியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றுகிறார்

Posted On: 13 SEP 2024 3:08PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நாளை (2024 செப்டம்பர் 14) புதுதில்லியில் அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியிலும்  4-வது அகில இந்திய அலுவல் மொழி  சம்மேளனத்தின் தொடக்க அமர்விலும் உரையாற்ற உள்ளார். இந்தி அலுவல் மொழியாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் 2024 செப்டம்பர் 14, 15 தேதிகளில் புதுதில்லி பாரத் மண்டபத்தில் 4வது அகில இந்திய அலுவல் மொழி  மாநாட்டை அலுவல் மொழித் துறை ஏற்பாடு செய்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ மொழித் துறை 2021-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டை ஏற்பாடு செய்து வருகிறது.

அலுவல் மொழி வைரவிழாவை முன்னிட்டு 'ராஜ்பாஷா பாரதி' இதழின் வைரவிழா சிறப்பு வெளியீட்டை மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட உள்ளார். வைர விழாவை முன்னிட்டு, அஞ்சல்  தலையையும், நாணயத்தையும் திரு அமித் ஷா வெளியிடுவார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்பாஷா கவுரவ், ராஜ்பாஷா கீர்த்தி விருதுகளையும் வழங்கவுள்ளார். நிகழ்ச்சியில் சில புத்தகங்கள், இதழ்கள் வெளியிடப்படும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பாரதிய பாஷா அனுபாக் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளனர். பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தி மொழி வளர்ச்சிக்கும், பிற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், இந்திய மொழிகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்புக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். அரசியலமைப்பின் நோக்கத்தையும் பிரதமரின் வழிகாட்டுதலையும் கருத்தில் கொண்டு, இந்தியுடன் இந்திய மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அவற்றுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறை பாரதிய பாஷா அனுபாக் நிறுவ முன்மொழிந்தது.

இந்தி தின நிகழ்ச்சியும் முதல் அகில இந்திய அலுவல் மொழி மாநாடும்  (பாரதிய ராஜ்பாஷா சம்மேளனம்) 2021-ம் ஆண்டில் வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது அகில பாரதிய ராஜ்பாஷா சம்மேளனம் சூரத்திலும், புனேவிலும் ஏற்பாடு செய்யப்பட்டன.

புதுதில்லியில் இந்தி தின நிகழ்ச்சி, நான்காவது அகில பாரதிய ராஜ்பாஷா சம்மேளனம் ஆகியவற்றை ஏற்பாடு செய்வது சிறப்பு வாய்ந்ததாகும். இந்தி அலுவல் மொழியாக மாறிய 75 ஆண்டுகால பயணம், பல முக்கிய மைல்கற்களை கடந்தது மட்டுமின்றி, தொழில்நுட்பத் துறையிலும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் நான்காவது அகில பாரதிய ராஜ்பாஷா மாநாட்டில், கடந்த 75 ஆண்டுகளில் இந்தி ஒரு அலுவல் மொழி, பொது மொழி, தொடர்பு மொழியாக மாறியுள்ள முன்னேற்றம் குறித்து ஆழமான விவாதம் நடைபெறும்.

மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய், திரு பண்டி சஞ்சய் குமார், நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் துணைத் தலைவர் திரு பர்த்ருஹரி மஹ்தாப், குழுவின் இதர உறுப்பினர்கள், மத்திய அரசின் செயலாளர்கள், பல்வேறு வங்கிகள் பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தென்னிந்தியாவைச் சேர்ந்த இரண்டு இந்தி அறிஞர்கள், ஆகியோர் தொடக்க அமர்வில் கலந்து கொள்வார்கள். இரண்டு நாள் மாநாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054494  

---------------

PLM/RS/KR


(Release ID: 2054556) Visitor Counter : 64