உள்துறை அமைச்சகம்

இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் முதலாவது அமைப்பு தின விழா புதுதில்லியில் நாளை கொணடாடப்படுகிறது

Posted On: 09 SEP 2024 6:21PM by PIB Chennai

இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் முதலாவது  அமைப்பு தின விழா புதுதில்லியில் நாளை (10.09.2024) கொணடாடப்படுகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றுவார். மேலும் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான முக்கிய முன்முயற்சிகளையும் அவர் தொடங்கிவைப்பார்.

சைபர் குற்றங்கள் குறைப்பு மையத்தை  அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த அமைப்பில் முக்கிய வங்கிகள், நிதிச்சார்ந்த நிறுவனங்கள், பணப்பட்டுவாடா ஒருங்கிணைப்பாளர்கள், தொலை தகவல் தொடர்பு  சேவை வழங்குவோர், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் சட்ட அமலாக்க முகமைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பார்கள். சட்ட அமலாக்கத்தில் கூட்டமைப்புக்கு ஓர் உதாரணமாக இந்த அமைப்பு விளங்கும்.

நாட்டின் சைபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக  இருப்பவர்களை எதிர்கொள்ள சைபர் கமாண்டோக்கள் திட்டத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா  நாளை தொடங்கிவைப்பார். பயிற்சி பெற்ற இந்த கமாண்டோக்களின் பிரிவு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலும் மத்திய காவல் அமைப்புகளிலும்  இடம்பெற்றிருக்கும்.

நாளைய விழாவில், மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார், உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பு செயலாளர், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொள்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053193  

***

SMB/RS/DL



(Release ID: 2053236) Visitor Counter : 26