பிரதமர் அலுவலகம்

வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 02 SEP 2024 9:13PM by PIB Chennai

தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் எஸ்யு5 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"பாராலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் எஸ்யு5 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸின் முயற்சி மிகச்சிறப்பானது! அவரது அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் இந்த வியத்தகு சாதனைக்கு வழிவகுத்தது. அவருக்கு வாழ்த்துக்கள்.

#Cheer4Bharat"

***

(Release ID: 2051073)

MM/AG/KR



(Release ID: 2051673) Visitor Counter : 23